|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 February, 2012

இனி திராவிட கட்சிகளை ஒழிப்பதே எனது நோக்கம் ராமதாஸ்!

திராவிட கட்சிகளுடன் மாறி, மாறி கூட்டணி வைத்ததுதான் நான் செய்த தவறு, இனி திராவிட கட்சிகளை ஒழிப்பதே எனது நோக்கம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.


இதுகுறித்து அவர் இன்று கோவையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:ஒளிமயமான எதிர்காலத்தை தருவதாகக் கூறி திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்தன. ஆனால் திராவிட கட்சிகளின் ஆட்சியில் மின்வெட்டுதான் கிடைத்துள்ளது. இதனால் தமிழகம் இருண்ட மாநிலமாக மாறிவிட்டது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 3 மாதத்தில் மின்வெட்டு விடுதலை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். ஆனால் இன்று தமிழகம் முழுவதும் 8 மணி நேரம் மின்தடை உள்ளது. கிராமப்புறத்தில் 12 மணி நேரத்துக்கும் மேலாக மின்சாரம் இருப்பதில்லை. மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்பது தெரியவில்லை. கோவையில் உள்ள சிறு, குறுந் தொழிற்சாலைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.தமிழக சட்டப்பேரவையில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதை நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும். சென்னையில் தினமும் ஒரு கொலை நடக்கிறது. பெருங்குடி வங்கிக் கொள்ளையர்களை இதுவரை கண்டுபிடிக்கவில்லை.


1967 - ல் இருந்து சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான் தமிழகத்தை ஆண்டு வருகிறார்கள். இதன் காரணமாக  திராவிட கட்சிகள் தமிழ்நாட்டை  சீர்கேட்டிற்கு இழுத்து சென்று விட்டது. திராவிட கட்சிகளை ஒழிப்பதே எங்கள் நோக்கம். மாறி, மாறி கூட்டணி வைத்தது தான் நான் செய்த பெரிய தவறு.  திராவிட கட்சிகள் தமிழகத்திற்கு கொடுத்தது மூன்றுதான். குடி, சினிமா மோகம், இலவசம் இவற்றைத்தான் திராவிட கட்சிகள் தமிழகத்துக்கு கொடுத்துள்ளன. சினிமாக்காரர்களை நம்பி தமிழகம் சீரழிந்தது போதும்.  தமிழகம் வளம் பெற சினிமா மோகத்தில் இருந்து மாணவர்கள் விடுபட வேண்டும்.இவ்வாறு ராமதாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...