மது பிரியர்களுக்கு ஏற்கனவே எண்ணற்ற மது வகைகள் புழக்கத்தில் உள்ளன.
இந்நிலையில் ஜார்க்கண்ட் இளைஞர்கள் பாம்பு ஒயினை அருந்த போட்டோ போட்டியில்
ஈடுபட்டுள்ளனர். பாம்பு ஒயினின்
பிறப்பிடம் சீனாவாகும். அங்கு இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக புழக்கத்தில்
உள்ளது. தாவர மதுவில் பாம்பை ஊறப்போட்டு பாம்பு ஒயின் தயாரிக்கப்படுகிறது.
இதற்கு விஷப்பாம்புகள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
இந்த விஷயத்தில் மனிதனுக்கு ஆபத்து ஏற்படாதபடி தடுக்க சில ரசாயணங்களும் சேர்க்கப்படுகின்றன. பாம்பு ஒயின் மிகுந்த போதை தரக்கூடியது என்ற போதிலும் பாம்பின் விஷம் காரணமாக உயிருக்கு ஆபத்து ஏற்படாது என்று சர்ப்பவியல் வல்லுநர்கள் ரசியுதீன், ஸ்ரீவத்சவ் ஆகியோர் கூறியுள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில், இளைஞர்கள் இடையே பரவலாக புழக்கத்தில் உள்ள பாம்பு ஒயின் அண்டை மாநிலங்களான பீகார், சத்தீஸ்கர், ஒரிசா, மேற்கு வங்காளம், மத்திய பிரதேசம் ஆகியவற்றிலும் பிரபலமாகத் தொடங்கியுள்ளது. பாம்பு ஒயினுக்கு கிராக்கி அதிகரித்து வருகிறது. இதற்காக, எவ்வளவு விலை வேண்டுமானாலும் கொடுக்க இளைஞர்கள் தயாராகி இருக்கிறார்கள்.
No comments:
Post a Comment