|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 November, 2011

கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் போடப்பட்டு, 16 ஆண்டுகளில் முதன் முறையாக, கண்டலேறு அணையிலிருந்து, 8 டி.எம்.சி., நீர் !


கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் போடப்பட்டு, 16 ஆண்டுகளில் முதன் முறையாக, கண்டலேறு அணையிலிருந்து, 8 டி.எம்.சி., நீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. இந்தாண்டு, ஜூன் 23 ம் தேதி முதல், கிருஷ்ணா நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டது. நேற்று காலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 316.58 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதுவரை, 7,946.85 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வந்துள்ளது. கடந்த, 16 ஆண்டுகளில், இப்போது தான் ஒப்பந்தப்படி தண்ணீர் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு, 2009ல், 6.858 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் வந்ததே அதிகமாக இருந்தது.

ஆந்திர மாநல பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "கிருஷ்ணா நீர், கடந்த 16 ஆண்டுகளாக, தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது. தொடர் மழை, கால்வாய் சீரமைப்புப் பணி போன்று பல்வேறு காரணங்களால், முழு அளவு தண்ணீர் வழங்க முடியவில்லை. இந்த ஆண்டு தான் ஒப்பந்தப்படி, முழு அளவு கிருஷ்ணா நீர் வழங்கியுள்ளோம். எட்டு டி.எம்.சி., என்ற அளவை எட்டியதும், கண்டலேறு அணை மூடப்படும்' என்றார். நான்கே நாட்களில் எல்லை கடக்கும் நீர் சென்னை நகரின் குடிநீர் தேவைக்காக, தமிழக-ஆந்திர அரசுகள் இடையே, 1983ம் ஆண்டு, ஏப்ரல்18ம் தேதி கிருஷ்ணா நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி, ஒவ்வொரு ஆண்டும், 15 டி.எம்.சி., கிருஷ்ணா நீர் தர வேண்டும். இதில், 3 டி.எம்,சி, சேதாரம் போக, ஜூலை-அக்டோபர் மாதங்களில், 8 டி.எம்.சி., ஜனவரி-ஏப்ரல் மாதங்களில், 4 டி.எம்.சி., நீர் தர வேண்டும்.

கண்டலேறு அணையிலிருந்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வரை, 152 கி.மீட்டர் தூரத்திற்கு, கால்வாய் அமைக்கும் பணி, 13 ஆண்டுகளாக நடந்து, 1996ம் ஆண்டு நிறைவடைந்தது. பணிகள் நிறைவடைந்ததும், முதல் முறையாக, 1996ம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நீர் திறக்கப்பட்டது. இந்த 16 ஆண்டுகளில், ஒரு முறை கூட ஒப்பந்தப்படி, 15 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கவில்லை. கால்வாய் சேதம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இது சாத்தியப்படவில்லை.சேதமடைந்த கால்வாயை, மறைந்த ஸ்ரீசத்ய சாய்பாபா, தனது அறக்கட்டளை மூலமாக, 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சீர்படுத்தினார். இதனால், ஆரம்பத்தில், 10 நாட்களில் கிடைத்த தண்ணீர், தற்போது, நான்கே நாட்களில் தமிழக எல்லையை அடைகிறது. இதே போல், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் முதல் பூண்டி வரை உள்ள, 25 கி.மீ.தூர கால்வாய், ஸ்ரீசத்ய சாய்பாபா அறக்கட்டளை மூலம் சீர் செய்யப்பட்டது. இதன் பயனாக, தெலுங்கு கங்கை கால்வாய், சாய்கங்கா கால்வாய் என அழைக்கப்பட்டது.

இதுவரை, தமிழகத்திற்கு கிடைத்த கிருஷ்ணா நீர் விவரம்:
ஆண்டு கிருஷ்ணா நீர் வரத்து(டி.எம்.சி., அளவில்)

1996 0.078
1997 2.860
1998 3.385
1999 1.948
2000 3.615
2001 3.113
2002 3.260
2003 -----
2004 1.331
2005 3.684
2006 3.795
2007 5.991
2008 4.438
2009 6.858
2010 6.817
2011 7.946(இதுவரை)

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...