|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 November, 2011

வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டெஸ்டில் இந்திய அணி வெற்றி!


வெஸ்ட் இண்டீசிற்கு எதிரான டில்லி டெஸ்டில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ள போதிலும், மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் 76 ரன்னில் ஆட்டமிழந்து சத சாதனையை இப்போட்டியிலும் தவற விட்டிருப்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்கள் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், 1 டுவென்டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியா வந்துள்ளது. ‌டெஸ்ட் தொடரின் முதல் போட்டி டில்லியில் நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 304 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியின் துவக்க வீரர்கள் சிறப்பாக விளையாடிய போதிலும், மற்ற வீரர்களின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் எல்பிடபிள்யூ முறையில் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். 2ம் இன்னிங்சில் இந்திய வீரர்கள் சிறப்பாக பந்துவீச, வெஸ்ட் இண்டீஸ் அணி, 180 ரன்களில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து, 276 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கான 276 ரன்களை எடுத்து 5 விக்கெட் வி்த்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், தொடரில் 1-0 கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

சச்சின் அரைசதம் : முதல் இன்னிங்சில் 7 ரன்னில் ஆட்டமிழந்திருந்தாலும், 2ம் இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய சச்சின் அரைசதமடித்தார். இது, சச்சின் டெஸ்ட் அரங்கின் 62வது சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போ‌ட்டியிலாவது, சதமடித்து, சதத்தில் சாதனையை சச்சின் படைப்பார் என்ற எதிர்பார்ப்பு இன்று மீண்டும் வீணாணது. மாஸ்டர் பேட்ஸ்‌‌மேன் சச்சின் டெண்டுல்கர், ஒருநாள் கிரிக்‌கெட் போட்டிகளில் இதுவரை 51 சதங்களும், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 48 சதங்களும் கடந்துள்ளார். அவர் இன்னும் ஒரு சதம் அடித்தால், சதத்தில் சாதனை செய்ததாக அமையும். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், 15 ஆயிரம் ரன்களை கடந்த முதல்வீரர் என்ற சாதனையை நேற்று சச்சின் நி்கழ்ந்திருந்த நிலையில், இன்று சதமடித்து சாதனை படைப்பார் என்ற ரசிகர்களின் கனவை, கனவாகவே இருக்க செய்துவிட்டார். இங்கிலாந்தில் நடைபெற்ற 3 டெஸ்ட் ‌போட்டிகளில் இந்த சாதனையை சச்சின் நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அத்தொடரில் பெரிதாக சோபிக்கவில்லை ஒருநாள் மற்றும் டுவென்டி20 போட்டிகளில் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டது. அதேபோல், இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.அஸ்வின் அபாரம் : அறிமுகபோட்டியிலேயே, அதிக விக்கெட்கள் வீழத்திய இந்திய பவுலர்கள் பட்டியலில் தமிழக வீரர் அஸ்வின் இரண்டாம் இடம் பிடித்தார். முதலிடத்தில் ஹிர்வானி உள்ளார்.இரண்டாவது டெஸ்டிலாவது, சச்சின் சத சாதனையை செய்வாரா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க‌ வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...