தேசிய நெடுஞ்சாலைகள் முடக்கப்பட்டு இன்றோடு 100 நாட்களாகியும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் பெட்ரோல், டீசல், கேஸ் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவைகள் கள்ளச்சந்தையில் பலமடங்கு விற்கப்படுகின்றன.மணிப்பூரில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதியிலிருந்து ஐக்கிய நாகா கவுன்சில் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இம்பால்-திமாபூர்-குவாஹாத்தி நெடுஞ்சாலையும், இம்பால்-ஜிரிபாம்-சில்சார் ஆகிய இரு நெடுஞ்சாலைகளும் இப்போராட்டத்தால் முற்றிலும் முடக்கப்பட்டது. நாகா மக்கள் அதிகமாக வாழும் சேனாபதி மாவட்டத்திலிருந்து குக்கி மக்கள் அதிகம் வாழும் சாதர் மலைப்பகுதியை தனியாகப் பிரிக்க வேண்டும் என்று குக்கி மக்கள் ஆகஸ்ட் 1 லிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகா பகுதி மக்கள் ஆகஸ்ட் 21 லிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ 200-க்கும், கேஸ் சிலிண்டர் ரூ 2 ஆயிரத்துக்கும் கள்ளச்சந்தையில் விற்கப்படுகின்றன.ர்தல் நெருங்குவதால் மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளதாக ஐக்கிய நாகா கவுன்சிலின் தகவல் தொடர்பாளர் மிலன் குற்றம்சாட்டியுள்ளார்.இந்த விஷயத்தில் மத்திய அரசு தலையிட்டு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மணிப்பூர் மாநில மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment