தூதரக சேவையை விரிவுபடுத்துகிறது அமெரிக்கா!
அமெரிக்க விசாக்களுக்கான தேவை, ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருதையடுத்து, அமெரிக்கா தனது துணைதூதரக சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, பத்திரிகையாளர்களை சந்தித்த விசா சேவைகளுக்கான நிர்வாக இயக்குனர் எட் ரமோடோவ்ஸ்கி கூறியதாவது, சீனா மற்றும் பிரேசில் நாடுகளில் இருந்து அமெரிக்க விசாவிற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. கடந்தாண்டில், 7.5 மில்லியனுக்கு மேற்பட்டோர் புதிதாக விசாவிற்கு விண்ணப்பித்திருந்தனர். இது, 2010ம் ஆண்டை கணக்கிடும்போது, 17 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சீனா மற்றும் பிரேசிலில், அமெரிக்க விசாக்களின் தேவை அதிகரித்துள்ளதன் காரணத்தினால், நன்கு பயிற்சி பெற்ற 100க்கும் மேற்பட்ட அதிகாரிகளை அங்கு அனுப்ப உள்ளோம். சீனா மற்றும் பிரேசில் நாடுகளி்ல், அமெரிக்க விசாக்களின் தேவை அதிகரித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆண்டில் மட்டும், அமெரிக்கா சீனாவிற்கு 35 சதவீதமும், பிரேசிலிற்கு 44 சதவீத விசாக்களும் வழங்கியுள்ளது. அமெரிக்காவி்ல் மீண்டும் திரும்பியுள்ள பொருளாதாரம் மற்றும் அதிகரித்துள்ள வேலைவாய்ப்புகளே, அனைவரும் யுஎஸ் விசாவை விரும்புவதற்கு காரணம். 2013ம் ஆண்டிற்குள், 2.2 மில்லியன் விசாக்கள் சீனாவிற்கும், 1.8 மில்லியன் விசாக்கள் பிரேசிலிற்கும் வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவி்ததார். சீன தலைநகர் பீஜி்ங்கில் அமெரிக்க தூதரகமும், ஷாங்காய், குவாங்சூ, செங்யாங் மற்றும் செங்டு நகரங்களில் துணை தூதரங்கள் இயங்கி வருவதாக சீனாவில் உள்ள அமெரிக்க தூதரக்ததின் குடியேற்றத்துறை அமைச்சர் சக் பென்னட் தெரிவித்தார்.
No comments:
Post a Comment