|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 March, 2011

நாட்டிலேயே உயரமான புத்தர் சிலை திறப்பு

நாட்டிலேயே மிக உயரமான, 90 அடி உயர புத்தர் சிலை, வாரணாசியில் உள்ள சாரநாத்தில் நேற்று திறக்கப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள சாரநாத்தில் முதன் முதலில் புத்தர் சொற்பொழிவு ஆற்றினார். இதை நினைவு கூரும் வகையில், அங்கு கடந்த பத்தாண்டுகளாக 90 அடி உயரமுள்ள, ஒரே மணற்பாறையால் ஆன புத்தர் சிலை செதுக்கப்பட்டு வந்தது. வேலை முடிவடைந்துள்ள நிலையில், புத்தர் சிலை நேற்று திறந்து வைக்கப்பட்டது. வேத மந்திரங்கள் ஓத சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தாய்லாந்து நாட்டின் முன்னாள் பிரதமர் ஜெனரல் சுரைடு, அந்நாட்டு பிரதிநிதி பிரகு தம்மா யுதி ஆகியோர் முன்னிலையில் நேற்று சிலை திறக்கப்பட்டது. 40 பேர் அடங்கிய பிரதிநிதிகள் குழு இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இதுகுறித்து ஜெனரல் சுரைடு கூறுகையில், "புத்தர் சிலை திறப்பு மூலம் இருநாடுகளுக்கு இடையிலான உறவு வலுப்படும். ஒவ்வொரு ஆண்டும் இருநாடுகள் இடையே அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். புத்தர் சிலை திறப்பு இதற்கு மேலும் உந்துதலாக இருக்கும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...