அரசு கேபிளில், நேற்று முதல், "விஜய், டிஸ்கவரி தமிழ், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், டைம்ஸ் நவ்' உட்பட, பல்வேறு கட்டண சேனல்களும் ஒளிபரப்பப்பட்டன.
அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், அரசு கேபிள், "டிவி' நிறுவனத்திற்கு புத்துயிர் அளிக்கப்பட்டு, ஒளிபரப்பு சேவையை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2ம் தேதி, அரசு கேபிள், "டிவி' நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையை, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார். மாதம், 70 ரூபாய் கட்டணத்தில், 90 சேனல்களை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதில், கட்டண சேனல்களும் ஒளிபரப்பாவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, இலவச சேனல்களுடன், நேற்று முதல், பல்வேறு கட்டண சேனல்களும் ஒளிபரப்பாகி வருகின்றன.
இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: செவ்வாய்க் கிழமை(நேற்று) முதல், விஜய், ஜீ தமிழ், டிஸ்கவரி தமிழ், போகோ, கார்ட்டூன் நெட்வொர்க், அனிமல் பிளானட், நியோ கிரிக்கெட், சோனி மேக்ஸ், ஏ.எக்ஸ்.என்., எச்.பி.ஓ., - நேஷனல் ஜியாகிரபிக், என்.டி.டி.வி., - சி.என்.என்., டைம்ஸ் நவ், ஈ.எஸ்.பி.என்., ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஸ்டார் கிரிக்கெட், டென் கிரிக்கெட், டென் ஸ்போர்ட்ஸ் உள்ளிட்ட, பல்வேறு கட்டண சேனல்களும், எவ்வித கூடுதல் கட்டணமும் இன்றி ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அரசு கேபிள், "டிவி' நிறுவனத்தில் இணைந்துள்ள கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் இணைப்பு பெற்றுள்ள அனைவரும், மாதம், 70 ரூபாய் கட்டணத்தில் அனைத்து சேனல்களையும் பார்க்கலாம். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment