|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 September, 2011

ராஜபக்சே மீது போர்க்குற்ற விசாரணை நடத்தியே தீர வேண்டும் ஐ.நா. பிரதிநிதிகளிடம் தமிழ் அமைப்புகள்!

சென்னை அடையாறில் ஐ.நா.சபையின் ஓர் அங்கமான யூனிசெப் அமைப்பு உள்ளது. இந்த அலுவலகத்திற்கு இன்று காலை பல்வேறு தமிழ் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் வந்தனர். அங்கிருந்த ஐ.ந்ô. பிரதிநிதிகளிடம் மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, இலங்கையில் தொடர்ந்து முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களையும், அங்குள்ள கொடிய சித்ரவதை சிறைகளில் உள்ள இளைஞர்களையும் விடுவித்து அவரவர் வாழ்ந்த இடங்களுக்கு அனுப்ப வேண்டும். அவர்கள் அங்கு கவுரவமான வாழ்க்கையைத் தொடங்க உரிய நடவடிக்கையை ஐ.நா. எடுக்க வேண்டும். தமிழர் பகுதிகளில் உள்ள சிங்கள ராணுவத்தை திரும்பப் பெற வேண்டும்.தமிழர் பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட சிங்களர்களை வெளியேற்ற வேண்டும். அங்கு நடந்த போர்க்குற்றங்களை அந்த நாட்டு அரசே விசாரித்தால் நீதி கிடைக்காது. சர்வதேச நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த வேண்டும். சேனல் 4 மற்றும் சுதந்திரமான ஊடகங்கள் வெளியிட்ட ஆதாரங்களை இந்த விசாரணைக்கு உரிய ஆதாரங்களாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பலத்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராஜபக்சேவை சர்வதேச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும். தமிழர் பகுதிகளில் வாழும் மக்களின் கருத்துக்களை அறிவதற்கு அங்கு பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும். சர்வதேச சமூகத்தின் மேற்பார்வையில் இப்பணிகள் நடைபெறவேண்டும்.

மேற்கண்ட இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை வெளிநாடுகளில் தஞ்சம் அடைந்துள்ள தமிழர்களை இலங்கைக்கு வெளியேற்றாதபடி, ஐ.நா. சபை பார்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...