ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்தவர் மாலினி முர்மு. இவருக்கு
வயது 22. இவர் பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டியூட் ஆப் மேனேஜ்மென்ட்
(ஐஐஎம்) நிறுவனத்தில் எம்பிஏ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.இந்நிலையில், சில
நாட்களாக வகுப்புக்கு செல்லாமல் விடுதியில் உள்ள தனது அறையில் முடங்கி
கிடந்தார். 19.09.2011 அன்று மாலை அவரது தோழிகள் வந்து பார்த்தபோது,
அறையின் கதவு பூட்டிக்கிடந்தது. பல முறை தட்டியும் திறக்காததால்,
காவலாளிகள் கதை உடைத்தனர். உள்ளே மாலினி முர்மு தற்கொலை செய்த நிலையில்
பிணமாக கிடந்தார்.
இணையதளத்தின் மூலம் அவர் வாலிபர் ஒருவரை தீவிரமாக காதலித்ததும், அவருடனான உறவு முறிந்ததால் ஏற்பட்ட விரத்தியின் காரணமாகவே, மாலினி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
தற்கொலைக்கு முன்பு அந்த வாலிபருக்கு இணையதளம் மூலம் மாலினி எழுதியுள்ள கடிதத்தையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த தற்கொலை சம்பவம் ஐஐஎம் கல்லூரி நிர்வாகத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மாலினியின் பெற்றோரும் இந்த செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். உடலை பெற்றுக்கொள்ளுவதற்காக மாணவியின் பெற்றோர் ஜார்க்கண்டில் இருந்து பெங்களூருக்கு வந்தனர்.தற்கொலைக்கான காரணத்தை தனது லேப்டாப்பில் மாலினி குறித்துவைத்துள்ளார். தனது நண்பர் தன்னைவிட்டு பிரிந்துவிட்டதால் தற்கொலை செய்துகொள்வதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
மாலினி அந்த அறையில் வேறு மாணவிகளின் துணை இல்லாமல் தனியாகத்தான் தங்கியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர். பெங்களூரில்தான் அவரது நண்பரும் இருந்துள்ளார் என்றும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் அவர்கள் பிரிந்துள்ளனர் என்றும் போலீசார் தெரிவித்தனர். ஃபேஸ்புக் சமூகவலைத்தளம் மூலம் போலீசார் இதைக் கண்டுபிடித்துள்ளனர்.
ஃபேஸ்புக்கில் அந்த நண்பர் மாலினியைப் பிரிவது குறித்து கருத்து தெரிவிக்கையில், என்னுடைய கேர்ள்ஃபிரண்டை விட்டு விலகிவிட்டேன். இன்று சுதந்திரமான நாளாக உணர்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து ஐஐஎம் அதிகாரிகள் கருத்து எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். நண்பர் பிரிந்ததால் ஐஐஎம் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:
Post a Comment