ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
16 June, 2011
பாபா ராம்தேவ் உண்ணாவிரதம் செட்டப்பா ?
ஊழலை ஒழிக்கக் கோரி பத்து நிபந்தனைகளை விதித்து பாபா ராம்தேவ் நடத்திய உண்ணாவிரதம் ஒரு செட்டப் டிராமா என்று புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக உலா வர ஆரம்பித்துள்ள ஒரு வீடியோதான் ராம்தேவ் மீதான சந்தேகத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. யூடியூபில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை ஜிபி ஜர்னலிஸ்ட் என்ற பெயரில் ஒருவர் வெளியிட்டுள்ளார். அதில் உத்தரகாண்ட் பாஜக முதல்வர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் ஒருவருடன் தொலைபேசியில் பேசுகிறார். மறு முனையில் உள்ளவரை பாபுஜி என்று விளித்துப் பேசும் பொக்ரியால், பாபாவின் (ராம்தேவ்) உண்ணாவிரதத்தை எப்படி முடிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறார் பொக்ரியால்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment