அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தின் புதிய தலைவராக அல்-ஜவாஹிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அல்-காய்தா வெளியிட்டுள்ள அறிக்கை, அந்த இயக்கத்தின் இணையதளம் ஒன்றில் வெளியாகியுள்ளது."ஜவாஹிரி தலைமையில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களுக்கு உதவும் நாடுகளுக்கு எதிரான புனிதப் போர் தொடரும். இஸ்லாமிய மண்ணை ஆக்கிரமித்துள்ளவர்கள் வெளியேறும் வரை எங்கள் போர் தொடரும்." என்று அல்-காய்தாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 2-ம் தேதி, அல்-காய்தாவின் தலைவரான பின் லேடன் பாகிஸ்தானில் அமெரிக்க அதிரடிப் படையினரால் கொல்லப்பட்டார். இதையடுத்து, அந்த இயக்கத்தில் இரண்டாம் நிலை தலைவராக இருந்து வந்த அல்-ஜவாஹிரி புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment