தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் கட்டப்படும் வீடுகளில் மாற்றுத்திறனாளிக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் வீட்டு வாரிய குடியிருப்புகள் மூலம் கட்டப்படும் வீடுகள், அடுக்குமாடி கட்டடங்கள், மற்றும் மனைகள் ஆகியவற்றில் அரசு ஊழியர்கள், பணிபுரியும் பத்திரிக்கையாளர்கள், ராணுவத்தினர் உள்ளிட்டோருக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு 1 சதவிகிதம் மட்டும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சமூகநலத்துறை சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கக் கோரி முதலமைச்சருக்கு வேண்டுதல் விடுக்கப்பட்டது.
அரசாணை வெளியீடு அந்த கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்திருந்தார். இதற்கான அரசாணையை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார். இந்த சலுகையை பெறுவதற்கு மாற்றுத்திறனாளிகள் என்பதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment