பெட்ரோல் விலை உயர்வு கடும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் இதனை
கட்டுப்படுத்த வேண்டும் என்று கோரும் மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட்டில்
மறுத்து விட்டது. பெட்ரோல் விலை அடிக்கடி உயர்வதும் மக்களை பாதிப்பதுமாக
உள்ளது. இதனால் இந்த விஷயத்தில் தலையிட்டு ஒரு முடிவை அறிவிக்க வேண்டும்
என்று பொதுநல வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் தாக்கலானது. இந்த
மனு தலைமை நீதிபதி கப்பாடியா தலைமையில் விசரணைக்கு வந்தது. அப்போது
பெட்ரோல் விலை நிர்ணயம் என்பது நிர்வாக, உலக சந்தைக்கு ஏற்ப நடக்ககூடியது.
அரசின் கொள்கை முடிவில் சுப்ரீம் கோர்ட் தலையிடாது என்றும் இந்த மனுவை ஏற்க
முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்து விட்டனர்.
No comments:
Post a Comment