ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-டியூன்ஸ் மற்றும் அமேசான் நிறுவனத்தின் ஆன்லைன்
ஷாப் போட்டியை நேரடியாக எதிர்கொள்ளும் வகையில், டிஜிட்டல் மியூசிக்
ஸ்டோரை, இணையதள ஜாம்பவானான கூகுள் நிறுவனம் திறந்துள்ளது. இதுகுறித்து,
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பத்திரிகையாளர்களை சந்தித்த கூகுள்
நிறுவன உயர் அதிகாரி பால் ஜோய்ஸ் கூறியதாவது, டிஜிட்டல் மியூசிக் ஸ்டோர்
திறக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. இதன்மூலம், ஆண்ட்ராய்ட்
சந்தையில், பல்லாயிரக் கணக்கான பாடல்களை கேட்டு மகிழ வாய்ப்பு
ஏற்பட்டுள்ளது. சோதனை முறையில், புதன்கிழமை துவங்கப்பட்டுள்ள இந்த சேவை,
அமெரிக்க மக்களுக்கு இலவச சேவையாக வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக,
ஆண்ட்ராய்ட் சந்தைக்கென வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மியூசிக் ஸ்டோர்,
விரைவில், ஆண்ட்ராய்ட் ஆபரேடிங் சிஸ்டத்தை அடிப்படையாகக் கொண்ட
ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட் கம்ப்யூட்டர்களுக்கும் விரிவுபடுத்தப்பட
இருப்பதாக அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment