வெள்ளைக்கொடி வழக்கில் இலங்கை முன்னாள் ராணுவ தளபதி பொன்சேகாவுக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதித்து கொழும்பு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. 30 ஆண்டுகால உள்நாட்டு போருக்குப்பின் ஆங்கில நாளிதழான சன்டே லீடர் என்ற பத்திரிக்கைக்கு பேட்டியளித்த பொன் சேகா, போரின் போது வெள்ளைக்கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப்புலிகளை சுட்டுக்கொல்லுமாறு பாதுகாப்பு செயலர் கோத்தபய ராஜபக்ஷே தமக்கு உத்தரவிட்டார் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், இவ்விவகாரத்தில் பொன்சேகா வன்முறையை தூண்டுவதாக கூறி அவர் மீது, கொழும்பு ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. 3பேர் அடங்கிய பெஞ்ச், பொன்சேகாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டது. பொன்சேகா ஏற்கனவே கடந்த 30 மாதங்களாக சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment