பா.ம.க.,விற்காக, இரவு, பகல் பாராமல் உழைத்தேன். அதையெல்லாம் மறந்து, பா.ம.க., எனக்கு பல துரோகம் இழைத்து விட்டது. நிர்வாகக் குழுவில் நான் பேசியது, கட்சியை வளர்க்கத் தானே தவிர, குறை கூறுவதற்காக அல்ல. கட்சி நிலை குறித்துப் பேசினால், அதற்கு சரியான பதில் சொல்லி இருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, என்னை வெளியேற்றுவதில் ஆர்வம் காட்டியது, என்னைப் போல யாரும் கேள்வி கேட்டுப் பேசிவிடக் கூடாது என்பதற்காகத் தான். என்னைச் சதி செய்து வெளியேற்றி விட்டனர். இவ்வாறு, வேல் முருகன் கூறினார்.
அண்டா, குண்டா விற்று வைச்சு... மேலும், அவர் கூறியதாவது: கட்சியின் மீது உள்ள பாசத்தால், அண்டா, குண்டாக்களை விற்றெல்லாம் கட்சியை வளர்த்தவர்களை, ராமதாஸ் சந்தியில் நிறுத்திவிட்டார். பா.ம.க.,வை வளர்க்கும் எண்ணத்தில், வேகமாகச் செயல்பட்டவர்களை எல்லாம், ராமதாஸ் வெளியேற்றி விட்டார். இப்படி வெளியேற்றப்பட்ட பு.தா.இளவரசன், காவேரி, கண்ணையன், டாக்டர் நெடுஞ்செழியன் ஆகியோருடன் கலந்தாலோசனை நடத்தி, வரும் ஜனவரியில், புதிய கட்சி துவங்க உள்ளேன். இக்கட்சி சாதி, மதம், மொழி பேதமின்றி, அனைவரும் இடம்பெறும் வகையில், எல்லா தரப்பு மக்களுக்கும் நன்மை செய்யும் கட்சியாக இருக்கும். பா.ம.க.,வில் எனக்கு, 80 சதவீதம் பேரின் ஆதரவு இருக்கிறது. பொங்கலுக்குள் கட்சி துவக்குவேன். கட்சியிலிருந்து, மேலும் பலர் பொங்கி வருவர். இது, போகப் போக ராமதாசுக்கு தெரியவரும். நான் துவங்கும் கட்சியை பொறுப்பாகவும், சிறப்பாகவும் நடத்துவேன். உயிருள்ள வரை இனி நான் பா.ம.க., பக்கம் போக மாட்டேன். இவ்வாறு, வேல்முருகன் கூறினார்.
No comments:
Post a Comment