|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மூன்றாம் நபர் வாகனக் காப்பீட்டு பிரிமியம், 60 -70 சதவீதம் உயரும்!


பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின் மூன்றாம் நபர் வாகனக் காப்பீட்டு பிரிமியம், 60 -70 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், வாகன உரிமையாளர்களின் பிரிமியச் சுமை அதிகரிக்க உள்ளது. மூன்றாம் நபர் காப்பீடு என்பது, வாகனங்களுக்கு ஏற்படும் சேதம், விபத்து உள்ளிட்டவற்றுக்கு வழங்கப்படும் இழப்பீட்டை குறிக்கிறது. உதாரணமாக, விபத்தால் பாதிக்கப்பட்ட நபருக்கான இழப்பீட்டை, அந்த வாகன உரிமையாளர் சார்பாக, பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும்.

இவ்வகையான காப்பீட்டில், பொதுக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அதிக இழுப்பு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சென்றாண்டு, பொதுக்காப்பீட்டு துறை, மூன்றாம் நபர் காப்பீட்டிற்கான இழப்பீடு அளித்த வகையில், 10 ஆயிரத்து 250 கோடி ரூபாய் என்ற அளவிற்கு இழப்பை சந்தித்துள்ளன.

இந்நிøலையில், மூன்றாம் நபர் காப்பீட்டிற்கு, பொதுக் காப்பீட்டுத்துறை நிறுவனங்கள் ஒதுக்கும் தொகையை, 15-20 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளதாக காப்பீட்டு ஒழுங்கு முறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் தலைவர் ஜே.ஹரி நாராயண் தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது:மூன்றாம் நபர் காப்பீட்டுக்கு, பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் ஒதுக்கும் தொகை, 153 சதவீதத்தில் இருந்து, 175 -200 சதவீத அளவிற்கு உயர்த்தப்படும். புதிய காப்பீட்டுத் திட்டங்களை உருவாக்குவதற்கும், அதற்கான அனுமதி பெறுவதற்கும் உள்ள கால அளவு குறைக்கப்பட வேண்டும். இதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

பொதுக் காப்பீட்டு நிறுவனங்களின், புதிய பங்கு வெளியீடு தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும்.இவ்வாறு ஹரி நாராயண் கூறினார். மூன்றாம் நபர் காப்பீட்டிற்கு ஒதுக்கும் தொகை அதிகரிக்க உள்ளதால், இவ்வகை காப்பீட்டிற்கான பிரிமியம், 60-70 சதவீதம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது, வாகன உரிமையாளர்களுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தும் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...