சர்வதேச வர்த்தகம் மற்றும் ஒடிசாவில் முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு,
ஒடிசா மாநிலம் புனேஸ்வரில் உலக வர்த்தக மையம் அமைக்க, தி வேர்ல்டு டிரேட்
சென்டர் அசோசியேசன் ஒப்புதல் அளித்துள்ளது. உலக வர்த்தக மைய சங்க ஆலோசகர்
ஜெயந்த் காந்தே, தனது சகாக்களுடன் நடத்திய உயர்மட்ட கூட்டத்தில் இதற்கு
ஒப்புதல் அளிக்கப்பட்டது. கூட்டத்திற்கு பிறகு பத்திரிகையாளர்களை சந்தித்த
காந்தே கூறியதாவது, 95 நாடுகளில், 323 மையங்கள் உள்ளன். இந்த மையங்களின்
மூலம், கிட்டத்தட்ட 1 மி்ல்லியன் பிசினஸ் அசோசியேட்ஸ் இணைந்து
செயல்படுகி்ன்றனர். இது, சர்வதேச அளவிலான வர்த்தகத்தில், மூன்றில் ஒரு
பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. ஒடிசாவில், சர்வதேச அளவிலான வர்த்தகத்தை
மேம்படு்ததும் பொருட்டும், இன்ப்ராஸ்ட்ரெக்சர் மற்றும் அதன் சேவைகளை
ஊக்குவிக்கும் பொருட்டும் இங்கு உலக வர்த்தக மையம் அமைக்கப்பட உள்ளது.
வர்த்தகம் தொடர்பான சேவைகள், வர்த்தகம் தொடர்பான கல்வி, வர்த்தக
ஆய்வுகள், கண்காட்சி உள்ளிட்ட சேவைகள் இந்த உலக வர்த்தக மையத்தில் கிடைக்க
வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தொழி்ற்துறை செயலாளர் ராமசந்துரு
தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment