|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 November, 2011

கேள்வித்தாள் அவுட்: 4 அரசு அதிகாரிகளுக்கு ஆயுள் தண்டனை!


மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கும் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத் தேர்வில், மத்திய அரசு பாடத்திட்டமான சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட தேர்வும் ஒன்று. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய இந்த சி.பி.எஸ்.இ. தேர்வின்போது, அந்தமான் தீவுகளின் தலைநகர் போர்ட்பிளேரில் தேர்வுக்கு முன்னதாகவே கணிதம், அறிவியல் ஆகிய தேர்வுகளுக்கான கேள்வித்தாள்கள்  அவுட்' ஆயின. இந்த கேள்வித்தாள்கள் பல லட்சம் ரூபாய்க்கு அங்கு விற்பனையானது. அந்தமான் தீவுகளில் உள்ள சி.பி.எஸ்.இ. பள்ளிகள் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட மண்டலத்தில் இணைந்தவை ஆகும்.

ஆகவே, இந்த கேள்வித்தாள்  அவுட்' ஆன விவகாரம் சென்னை உள்பட தமிழ் நாட்டின் பல நகரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து சில தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. இதுகுறித்து சென்னை மண்டல சி.பி.எஸ்.இ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதிகாரிகளின் விசாரணையை தொடர்ந்து  அவுட்' ஆன கேள்வித்தாள்கள் அந்தமானில் வைக்கப்பட்டு இருந்த லப்பாத்தி பள்ளிக்கூடத்தின் முதல்வர் கிருஷ்ணம் ராஜபு, அரசு உதவிப் பொறியாளர் ரஷீத், போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல் சலாம், காட்டிலாகா அதிகாரி ஒருவர், போலீஸ்காரர் அருண் ஆகிய 5 பேர் மீது போலீசில் புகார் செய்தனர். இதைத்தொடர்ந்து 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் மீது அரசு ரகசியங்களை திருடி விற்றது, நம்பிக்கை மோசடி செய்தது, சதித்திட்டம் தீட்டியது, ஊழல் செய்தது உள்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. போலீசார் தீவிர விசாரணை நடத்தி அவர்கள் மீது போர்ட்பிளேர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.16.11.2011 இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் போலீஸ்காரர் அருண் விடுதலை செய்யப்பட்டார். மற்ற 4 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தேர்வுக்கான கேள்வித்தாள்  அவுட்' ஆன வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்த தீர்ப்பு கல்வி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...