தமிழ தேர்வாணைய குழு ( டி.என்.பி.எஸ்.சி.,) அதிகாரிகள் வீடுகளில் லஞ்ச
ஒழிப்பு போலீசார் இன்று காலையில் அதிரடி ரெய்டு நடத்தினர். கடந்த சில
மாதங்களுக்கு முன்னர் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் வீடுகளில் சோதனை
நடந்தது. தமிழகத்தின் முக்கிய அங்கமான தேர்வாணைய குழு மூலம் தேர்வு நடத்தி
நேரடியாக பணியில் நியமனம் செய்யும். இதன் மூலம் குரூப் 1 , குரூப் 2
அலுவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது போன்ற தேர்வில் முறைகேடு
நடப்பதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் இந்த அமைப்பின்
தலைவர் செல்லமுத்து மற்றும் உறுப்பினர்கள் வீடுகளில் நடத்தப்பட்ட ரெய்டில்
முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
இந்நிலையில் இன்று காலையில்
சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி., இணை செயலர் மைக்கேல் ஜெரால்டு, கீழநிலை
செயலர் ரவிஇளங்கோவன், மற்றும் பிரிவு அலுவலர்கள் உஷா, ராமமூர்த்தி,
லோகநாதன், பாலாஜி, ராதாகிருஷ்ணன், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலரின் நேர்முக
உதவியாளர் சதீஷ்குமார். சுகுமாரன் உள்ளிட்டோர் வீடுகளில் ரெய்டு
நடத்தப்பட்டு வருகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் உள்ள
அதிகாரிகள் 14 பேர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நுழைந்து சோதனை நடத்தி
வருகின்றனர்.
No comments:
Post a Comment