வார விடுமுறை நாட்களில் படிக்கும் வகையிலான முதுநிலை பட்டப்படிப்பில்
சேர்ந்து படித்தவர்கள் பிஎச்.டி. மேற்கொள்ள இயலாது என்று பல்கலைக்கழகங்கள்
தெளிவுபடுத்தியுள்ளன. தனியார் நிகர்நிலைப்
பல்கலைக்கழகம் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்ற மாணவர், பிஎச்.டியில்
சேர்க்கை கிடைக்காத காரணத்தால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்
தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து பல்கலைக்கழகங்கள்
தெளிவான முடிவினை எடுத்து அறிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தன.இந்த விவரத்தை அறிய தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னை அண்ணா
தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகங்களிடம்
கேட்டு பெறப்பட்டது.
அதில் பிஎச்.டி. மேற்கொள்ள வார விடுமுறை நாட்களில் படித்து பெற்ற பட்டம்
செல்லாது. இந்த கல்வியாண்டில் அவ்வாறு படித்தவர்கள் யாரும் பிஎச்.டி.யில்
சேர்க்கப்படவில்லை என்று சென்னை அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்
தெரிவித்துள்ளது.அதுபோல, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தற்போது பிஎச்.டி. மேற்கொண்டு
வரும் எந்த மாணவரும் வார விடுமுறை நாட்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள்
இல்லை. இந்த கல்வியாண்டில் மட்டுமல்ல, 2001 முதல் 2010 வரை
பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படித்த எவருமே வார விடுமுறை நாட்களில்
முதுநிலை பட்டம் பெற்றவர்கள் இல்லை என்பது தெளிவுபடுத்தியுள்ளது.
No comments:
Post a Comment