|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

23 September, 2011

ராஜபக்சேவைத் தண்டிக்கக் கோரி நியூயார்க் கோர்ட்டில் கர்ணல் ரமேஷின் மனைவி வழக்கு!


தனது கணவரைக் கொன்ற ராஜபக்சேவைக் கைதுசெய்து விசாரித்து தண்டனை வழங்கக் கோரி நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத் தளபதியான கர்ணல் ரமேஷின் மனைவி வழக்குத் தொடர்ந்துள்ளார்.அவரது சார்பில் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இந்த வழக்கைப் பதிவு செய்தார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் வந்து தங்கியுள்ள ராஜபக்சே, இந்த வழக்கைத் தொடர்ந்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இலங்கைத் தரப்பும் இந்த திடீர் வழக்கால் பீதியடைந்துள்ளது.

ரமேஷின் மனைவி அளித்துள்ள வழக்கில், இங்கிலாந்தின் சானல் 4 தொலைக்காட்சிப் படத்தில், ரமேஷ், இலங்கைப் படையினரால், அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் வைத்து விசாரணை செய்யப்படும் காட்சி, அவர் கொல்லப்பட்டதன் பின்னர் மற்றும் ஒரு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அவரது உடலை மனைவி அடையாளம் காட்டியமை ஆகியவை சாட்சியங்களாக் தெரிவிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் முப்படைகளுக்கும் தளபதி என்ற அடிப்படையில் அந்த நாட்டின் அதிபரான ராஜபக்சவே ரமேஷின் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவரே போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன் நியமித்த நிபுணர் குழு, இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக வெளியிட்ட அறிக்கை. அதில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், தாக்கப்பட்ட மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கணக்கு காட்டப்பட்டாத இன்னும் 140 ஆயிரம் பொதுமக்களின் உயிரிழப்பு என்பன கூடுதல் சாட்சியங்களாக இணைக்கப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...