ஐடி நிறுவனங்களில் வேலை பார்ப்போருக்கு ஹெச் 1 பி விசா அதிக அளவில் மறுக்கப்படுவதாக அமெரி்ககாவிடம் இந்தியா தெரிவித்துள்ளது. ஐடி
நிறுவனங்களில் பணிபுரிவோர் குறிப்பிட்ட சில புராஜெக்டுகளை முடிப்பதற்காக
அமெரி்க்கா செல்வது வழக்கம். அவ்வாறு செல்பவர்கள் ஹெச்1 பி விசா கேட்டு
விண்ணப்பிப்பார்கள். அவர்களின் விண்ணப்பங்கள் பெருமளவில்
நிராகரிக்கப்படுவதாக இந்தியா அமெரிக்காவிடம் புகார் தெரிவித்துள்ளது.
வாஷிங்டனில்
நடந்த சிஇஓ-க்கள் கலந்தாய்வில் வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த்
ஷர்மா ஹெச்1 பி விசா நிராகரிக்கப்படுவதாகத் தெரிவித்தார். அனுமதிக்கப்பட்ட
எண்ணிக்கையை விட குறைந்த அளவில் தான் ஹெச் 1 பி விசா கொடுக்கப்படுகிறது.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விசா விண்ணப்பங்கள் அதிக அளவில்
நிராகரிக்கப்படுகின்றது என்றார்.
இந்த கலந்தாய்வுக்கு டாடா குழும தலைவர் ரத்தன் டாடாவும், ஹனிவெல் சிஇஓ டேவிட் எம். கோட்டும் தலைமை வகித்தனர்.
No comments:
Post a Comment