ஸ்திரேலியாவுடனான காலிறுதி ஆட்டத்துக்குப் பிறகு பாகிஸ்தானுடனான ஆட்டம் ஒரு கனவு ஆட்டம் என்று இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். அவர்களின் பேட்டிங், பந்துவீச்சு பற்றி எங்களுக்குத் தெரியும். இந்திய அணியைப் பற்றி பாகிஸ்தான் வீரர்களுக்கும் தெரியும். மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியுள்ளோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி ஆட்டமிழந்தபோது பதற்றம் ஏற்பட்டது. ரெய்னா விளையாட வந்தபோது 20 முதல் 30 ரன்கள் வரை இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டும் என்று கூறினேன். அவர் சிறப்பாக விளையாடியது நம்பிக்கையை அதிகரித்தது. சிறப்பாக ஆடி வெற்றிபெற்றோம். கம்பீரும், நானும் விளையாடியபோது, சரியான புரிதல் இல்லாததால் கம்பீர் ரன்அவுட் ஆகிவிட்டார். அதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அவர் ஆட்டமிழந்ததற்கு என்னுடைய தவறே காரணம் என்று நினைக்கிறேன் என்றார்.
ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை. விவேகானந்தர்.
25 March, 2011
பாகிஸ்தானுடனான அரையிறுதி ஒரு கனவு ஆட்டம்: யுவராஜ் சிங்
ஸ்திரேலியாவுடனான காலிறுதி ஆட்டத்துக்குப் பிறகு பாகிஸ்தானுடனான ஆட்டம் ஒரு கனவு ஆட்டம் என்று இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியது: பாகிஸ்தானுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். அவர்களின் பேட்டிங், பந்துவீச்சு பற்றி எங்களுக்குத் தெரியும். இந்திய அணியைப் பற்றி பாகிஸ்தான் வீரர்களுக்கும் தெரியும். மேற்கிந்தியத் தீவுகள், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டங்களில் சிறப்பாக விளையாடியுள்ளோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி ஆட்டமிழந்தபோது பதற்றம் ஏற்பட்டது. ரெய்னா விளையாட வந்தபோது 20 முதல் 30 ரன்கள் வரை இருவரும் சேர்ந்து எடுக்க வேண்டும் என்று கூறினேன். அவர் சிறப்பாக விளையாடியது நம்பிக்கையை அதிகரித்தது. சிறப்பாக ஆடி வெற்றிபெற்றோம். கம்பீரும், நானும் விளையாடியபோது, சரியான புரிதல் இல்லாததால் கம்பீர் ரன்அவுட் ஆகிவிட்டார். அதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டேன். அவர் ஆட்டமிழந்ததற்கு என்னுடைய தவறே காரணம் என்று நினைக்கிறேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment