உலக சாம்பியனான ஆஸ்திரேலிய கால் இறுதியில் வெளியேற்றப்பட்டது. இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோற்றது குறித்து ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி “லீக்” ஆட்டத்திலும், இந்தியாவுக்கு எதிரான கால் இறுதியிலும் தோற்றோம். கால் இறுதியில் ஏற்பட்ட இந்த தோல்வி மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. நாங்கள் 20 ரன்கள் வரை குறைவாகவே எடுத்துவிட்டோம். 250 அல்லது 260 ரன் என்பது நல்ல ஸ்கோர் தான். பவுலிங்கிலும், பேட்டிங்கிலும் இந்திய வீரர்கள் சிறப்புடன் செயல்பட்டனர்.
இந்திய அணி ஒருங்கிணைந்து விளையாடியது. ஜாகீர்கானின் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்தது. குறிப்பாக பவர்பிளேயில் நன்றாக வீசினார். காம்பீர், தெண்டுல்கர், யுவராஜ் ஆகியோர் சிறப்பாக பேட்டிங் செய்து அரை சதம் அடித்தனர். இந்திய அணி சிறப்பாக விளையாடியது. வெற்றிக்கு தகுதியான அணி தான்.
இந்திய அணியின் பேட்டிங் வரிசை பலம் பெற்று காணப்படுகிறது. அரை இறுதியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தும். ஒருநாள் போட்டியில் இருந்து நான் ஓய்வு பெற மாட்டேன். ஆனால் எனது கடைசி உலக கோப்பை இது தான். உலக கோப்பையின் கடைசி ஆட்டத்தில் சதம் அடித்தது மகிழ்ச்சி தான்.
No comments:
Post a Comment