இலங்கையின் வடக்கே வவுனியாவில் செயற்பட்டு வந்த சர்வதேச செஞ்சிலுவைக் குழுவின் அலுவலகம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
கொழும்பில் இருந்து செயற்படுமாறு இலங்கை அரசாங்கம் சர்வதேச செஞ்சிலுவைக்குழுவை கேட்டுக்கொண்டதற்கு அமைவாக வவுனியா அலுவலகம் மூடப்படுகின்றது. எனினும் அதன் மனிதாபிமான பணிகள் தடைப்பட மாட்டாது''
அத்துடன் யுத்த மோதல்களில் இறந்தவர்களின் உடல்களையும், யுத்தக் கைதிகளையும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதற்கும். கைதிகளின் நலன்களைக் கவனிப்பதற்கும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு உதவி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

யுத்த மோதல்களில் சிக்கியிருந்த பொதுமக்களின் அவசர வைத்திய தேவைகள், அவர்களுக்கான உணவு விநியோகம் என்பவற்றை மேற்கொள்வதில் வழித்துணையையும், போர்ப் பிரதேசத்தில் இருந்த மக்களுக்கான வைத்திய சேவைகளையும் அது வழங்கி வந்தது.
அத்துடன் யுத்த மோதல்களில் இறந்தவர்களின் உடல்களையும், யுத்தக் கைதிகளையும் பரஸ்பரம் பரிமாறிக்கொள்வதற்கும். கைதிகளின் நலன்களைக் கவனிப்பதற்கும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு உதவி வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment