இந்த வாரம் விகடன் இதழில் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிடப்பட்டுள்ளது. வைகோ அ.தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறிய பரபரப்பான சூழ்நிலை ஒரு பக்கம், கிரைண்டர் அல்லது மிக்ஸி என தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகள் ஒரு பக்கம் தேர்தல் சூடு பரவிய சூழலில் 19.20 தேதிகளில் விகடன் குழுவினர் சுமார் 1000 பேர்களிடம் மாநகரம், நகரம், கிராமம், குக்கிராமம் என தமிழகம் முழுவதும் புகுந்து அனைத்து தரப்பு மக்களையும் சந்தித்து சர்வே கேள்வித்தாளை வைத்து மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டதாக விகடன் எழுதியுள்ளது.
அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை, தே.மு.தி.க. வேட்பாளர் அறிவிப்பு வெளியாவதற்கு முன்பே இந்த கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் பணம் கொடுத்தால் வாங்க மாட்டேன் என்று 54 சதவிகித்தினர் கூறியுள்ளனர். பணம் வாங்கினாலும் விரும்பிய கட்சிக்கு ஓட்டு போடுவேன் என்று 36. சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.
தேர்தல் கமிஷன் விதிமுறைகள் கட்டுபாட்டுடன் மிக நல்ல விஷயம் என்று 50.8 சதவிகிதத்தினர் தெரிவித்துள்ளனர். (நடவடிக்கைகளை கருணாநிதி எதிர்ப்பது ஊரறிந்த விஷயம்)
ம.தி.மு.க. வுக்கு வாக்குகள் இல்லை என்பதை 35 சதவிகிதத்தினர் ஒத்துக்கொண்டுள்ளனர். ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை வைத்து ஓட்டு போடுவேன் 46 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.
5 ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் இலவச திட்டங்கள் சாதனையல்ல மக்கள் வரிபணத்தைதானே கொடுத்துள்ளனர் என்று 47 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். ஏமாற்றுவேலை என்று 25 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். காங்கிரஸை தி.மு.க. மிரட்டி தொகுதிகளை வாங்கியது என்று 50 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர்.
விஜயகாந்த் அ.தி.மு.க. கூட்டணியில் சேர்ந்திருப்பது கூட்டணிக்கு பலம் என்று 70.7 சதவிகிதத்தினர் கூறியுள்ளனர். தி.மு.க. கூட்டணியை விட அ.தி.மு.க. கூட்டணி பலமானது என்று 53.68 சதவிகித மக்கள் கூறியுள்ளனர். கருணாநிதியை விட ஜெயலலிதா நல்லாட்சி தருவார் என்ற பெரும்பான்மையினோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அ.தி.மு.க கூட்டணிக்கு வாக்களிப்போம் என்று 44.26 சதவிகிதத்தினரும் தி.மு.க. கூட்டணிக்கு 34 சதவிகிதத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
யார் நல்லாட்சி தருவார்கள் என்பதில் ஜெயலலிதாவிற்கும், யாருக்கும் வாக்களிப்பீர்கள் சென்ற கேள்விக்கும் தி.மு.க. கூட்டணியை விட அ.தி.மு.க. கூட்டணியே அதிக சதவிகிதம் வாங்கி இருப்பது ஏதோ ஒரு மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள் என்பதையே புரிந்து கொள்ள முடிகிறது என்று விகடன் முடிவாக எழுதியுள்ளது.
அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைக்கு பிறகு மக்கள் ஆதரவு இன்னும் பெருகிய நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகள் மேலும் அதிகரித்திருக்கும் என்பது திண்ணம்.
தலை தப்பினால் போதும் என்று கருணாநிதியே தலைநகரைவிட்டு திருவாரூக்கு ஓடுகிறார் என்று கமெண்ட் வந்துள்ளது.
தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்த பிறகு ஜெயலலிதாவிற்கு வரும் கூட்டம், கூட்டணி கட்சிகள் பிரச்சாரம், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மார்ச்.31 அன்று சி.பி.ஐ. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தாக்கல் செய்யப்போகும் மனு, டி.ஜி.பி. மாற்றம் என பல்வேறு நிகழ்வுகளும் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் காரணமாக பெரும்பாலனா தொகுதிகளில் போட்டியிடுவதும் காங்கிரசுக்கு எதிர்ப்பலை கட்சிக்குள்ளேயே பெருகி வருவதும், மேலும் மக்கள் மனதை மாற்றப்போகிறது. அதற்கு விகடன் முன்னுரை எழுதியுள்ளது.
No comments:
Post a Comment