கிட்டத்தட்ட 48 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் புதுப்படம் ஒன்றின் தொடக்க
விழாவையும், சூட்டிங்கையும் நடத்தியிருக்கிறார்கள். அந்த படத்தின் பெயர்
"சிறுவாணி". இன்றைய காலகட்டத்தில் படப்பிடிப்பு தளங்கள் அனைத்துமே
சென்னையில்தான் இருக்கின்றன. ஆனால் முன்பு கோவை, சேலம், காரைக்குடி போன்ற
இடங்களில் ஸ்டுடியோக்கள் அமைந்திருந்தன. மாத சம்பளத்திற்கு நடிகர் நடிகைகளை
அமர்த்தி நடிக்க வைத்தார்கள். ஏவிம், மாடன் தியேட்டர்ஸ், பட்சிராஜா
ஸ்டுடியோஸ் என்று கடந்த காலத்தின் கல்வெட்டுகளாக இருக்கும் இவற்றில்
மிஞ்சியது ஏ.வி.எம் மட்டும்தான். கோவை பட்சிராஜா ஸ்டுடியோவில் கடைசியாக 48
வருஷங்களுக்கு முன் சிவாஜி நடித்த நான் பெற்ற செல்வம் என்ற படப்பிடிப்பு
நடந்ததாம்.
பல்லாண்டுகள் கழித்து சிறுவாணி படத்தின் தொடக்கவிழாவையும், படப்பிடிப்பையும் அங்கு நடத்தியிருக்கிறார்கள். சஞ்சய், ஐஸ்வரி ஜோடியாக நடிக்கும் இந்த படத்தை டைரக்டர் ரகுநாத் இயக்குகிறார். எம்.கே.டி பாகவதர், டி.ஆர்.மகாலிங்கம், பி.யூ..சின்னப்பா, எம்ஜிஆர், என்.எஸ்.கிருஷ்ணன். டி.ஏ.மதுரம் போன்ற ஜாம்பவான்கள் ஆடிப் பாடிய அந்த இடத்தில் தன் படத்தின் சூட்டிங்கை நடத்தியதை பெருமிதமாக கருதுவதாக கூறுகிறார் டைரக்டர் ரகுநாத்.

No comments:
Post a Comment