உலக அளவில் பல்வேறு துறைகளில் சேவை, சாதனை புரிந்தவர்களுக்காக
வழங்கப்படும் நோபல் பரிசைப் போன்று ஆசியாவிலும் பரிசு வழங்குவதற்காக பிரபல
தைவான் தொழிலதிபர் ஒருவர் 550 கோடி ரூபாய் வழங்க முன்வந்துள்ளார்.
பிரபல தொழில் அதிபர் சாமுவேல்யின் தைவான் நாட்டை சேர்ந்தவர். இவர் சீனாவில்
பெருமளவு முதலீடு செய்துள்ளார். உலக நன்மைக்காக பாடுபடுவர்களுக்கு உலகில்
வழங்கப்படும் நோபல் பரிசை போன்று ஆசியாவிலும் பரிசு வழங்கவேண்டும் என்று
அவரின் டேங் பரிசு நிறுவனம் முடிவு செய்தது. அதற்காக சுமார் 550 கோடி
ரூபாய் வழங்க சாமுவேல் முன்வந்துள்ளார்.
நோபல் பரிசை விட அதிகம்
இந்த டேங் பரிசானது வரும் 2014-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை
வழங்கப்படவுள்ளது. உலக நாடுகளில் உள்ள அனைவரும் இதில் கலந்து கொள்ளலாம்.
பரிசு பெறுபவர்களுக்கு 3 பில்லியன் தைவான் டாலர் வழங்கப்படும்.
உலகின் மிகப்பெரிய பரிசான நோபல் பரிசின் தொகையானது ரூ. 6 கோடிக்கு மேல்
உள்ளது. ஆனால் சாமுவேல் யின்னின் இந்த டேங் - பரிசுத்தொகை அதைவிட அதிகமாக 9
கோடி ரூபாய்க்கு மேல் உள்ளது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment