|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

21 September, 2011

ரெட்டி, கூட்டாளிகளுக்கு 200 லாக்கர்கள்!


கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்க அதிபருமான ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு பெல்லாரியில் உள்ள தனியார் வங்கியில் 200 லாக்கர்கள் உள்ளன. இதில் தங்கம், பிளாட்டினம், வைரம் போன்றவை பதுக்கப்பட்டுள்ளன. கர்நாடக சுற்றுலாத் துறை அமைச்சராக இருந்தவர் ஜனார்த்தன ரெட்டி. இவரும், இவரது சகோதரர்களும், பெல்லாரி மாவட்டம் மற்றும் அதையொட்டிய ஆந்திர எல்லைப் பகுதிகளில், ஏராளமான இரும்புத் தாது சுரங்கங்களை நடத்தி வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட பகுதியை விட அதிகமான இடங்களை ஆக்ரமித்து சுரங்கம் நடத்தியதாக, இவர்கள் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, கடந்த 5ம் தேதி ஜனார்த்தன ரெட்டியும், அவரது மைத்துனர் சீனிவாச ரெட்டியும், ஆந்திர ஐகோர்ட் உத்தரவுபடி கைது செய்யப்பட்டு, ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜனார்த்தன ரெட்டி மற்றும் சீனிவாச ரெட்டி ஆகியோர், பினாமி பெயரில் வெளிநாடுகளில் நிறுவனங்கள் நடத்தி வருவது தொடர்பாக விசாரிக்க வேண்டியிருப்பதால், கூடுதலாக மேலும் ஒன்பது நாட்கள் இவர்களை சி.பி.ஐ., காவலில் வைத்திருக்க அனுமதிக்கும்படி, சிறப்பு கோர்ட்டில் மனு செய்யப்பட்டிருந்தது. தெலுங்கானா போராட்டம் காரணமாக ஆந்திராவில் சகஜவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், நேற்றைய விசாரணையில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாததால் இந்த மனு மீதான விசாரணை நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

200 லாக்கர்கள் ஆக்கிரமிப்பு: ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவர்களது சகோதரர்கள், பெல்லாரியில் செல்வாக்கு பெற்றவர்கள். இங்குள்ள தனியார் வங்கியில் 350 லாக்கர்கள் உள்ளன. இதில், 200 லாக்கர்கள் ஜனார்த்தன ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகள் வசமுள்ளன. இதில், ஜனார்த்தன ரெட்டிக்கு சொந்தமான 10 லாக்கர்களில் பிளாட்டினம், தங்கம், வைரம் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன என, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், சி.பி.ஐ., சோதனையில் ஜனார்த்தன ரெட்டியின் மைத்துனருக்கு சொந்தமான லாக்கர்களிலிருந்து, 14 கிலோ தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. ஜனார்த்தன ரெட்டிக்கு சீனா, வியட்நாம், சிங்கப்பூர், துபாய், கம்போடியா ஆகிய நாடுகளில், நிறுவனங்கள் உள்ளன. சுரங்கத் தொழிலில் முறைகேடாக சேர்க்கப்பட்ட பணம், இந்த நிறுவனங்களில் பதுக்கப்பட்டுள்ளதாக சி.பி.ஐ.,யும், வருமான வரித்துறையினரும் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடக்க உள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...