மேல்முறையீடு செய்ததால் கட்டணம் நிர்ணயிக்கப்படாத 2000க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளிடம் அக்டோபர் 10ம் தேதி முதல் விசாரணை நடத்த கட்டண நிர்ணயக் குழு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க அரசால் நியமிக்கப்பட்ட நீதிபதி ரவிராஜபாண்டியன் கல்விக் கட்டணக் குழு நிர்ணயித்த கட்டணத்தை எதிர்த்து 6,400 தனியார்கள் பள்ளிகள் மேல் முறையீடு செய்தன.
இதில் 2,200க்கும் மேற்பட்ட பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் நடந்து வருவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. இந்நிலையில் நீதிபதி ரவிராஜபாண்டியன் கட்டண நிர்ணயக் குழுத் தலைவர் பதவியிலிருந்து ராஜினாமா செய்து, அவருக்குப் பிறகு ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். சிங்காரவேலு தலைவராக நியமிக்கப்பட்டார்.தற்போது மேல்முறையீடு செய்த 2,200க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு கட்டண நிர்ணயம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளிடம் அக்டோபர் 10ம் தேதி முதல் விசாரணை துவங்க உள்ளது. ஒவ்வொரு பள்ளி நிர்வாகிகளும், குறிப்பிட்ட தினத்தன்று உரிய ஆவணங்களுடன் நேரில் வர வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கல்விக் கட்டண நிர்ணயக் குழு நிர்ணயித்ததை விட கூடுதலாக கட்டணம் வசூலித்ததாக பல பள்ளிகள் மீது புகார்கள் வந்துள்ளன.
இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இதுவரை ஒரு சில பள்ளிகள் பற்றிய அறிக்கை மட்டுமே வந்துள்ளது. முழுமையாக அறிக்கை கிடைக்கப்பெற்றதும் தவறு செய்த பள்ளிகள் மீது நவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment