ஈரோடு மாநகராட்சி மேயர் அதிமுக வேட்பாளராக மாவட்ட மகளிர் அணி செயலாளர் மல்லிகா பரமசிவம் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில்
நேற்று முன்தினம், ‘விபச்சார வழக்கில் சிக்கியவர் ஈரோடு மாநகராட்சி அதிமுக
மேயர் வேட்பாளரா?‘ என்று ஈரோட்டில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டது, பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது. கட்சியை சேர்ந்தவர்களே தனக்கு எதிராக செயல்பட்டு
வருவதாக மல்லிகா தெரிவித்தார்.
தனக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சூரம்பட்டி போலீசில் புகார் அளித்தார். நேற்று சூரம்பட்டி
போலீஸ் ஸ்டேஷனில் டி.எஸ்.பி. தனபால், இன்ஸ்பெக்டர் விஜயன் ஆகியோர், அதிமுக
பாரதிநகர் கிளை செயலாளர் குப்புசாமி, எம்.ஜி.ஆர். மன்ற ஒன்றிய அவைத்தலைவர்
லிங்கேஸ்வரன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய துணை செயலாளர் பைக் முத்து,
லட்சுமிநகர் கிளை செயலாளர் இளங்கோவன், எலவமலை ஊராட்சி செயலாளர்
ஆனந்தமூர்த்தி, எலவமலை கிளை செயலாளர் மாதையன் மற்றும் ஆறுமுகம் ஆகியோரிடம்
விசாரணை நடத்தினர்.
போஸ்டருக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று விசாரணையின்போது இவர்கள் தெரிவித்தனர்.இது குறித்து அதிமுக நிர்வாகிகள், “மேயர் வேட்பாளரை மாற்ற கோரி கட்சி மேலிடத்துக்கு பேக்ஸ் அனுப்பினோம்.
அந்த மனு மீண்டும் மல்லிகா பரமசிவத்திடமே வந்துள்ளது. அங்கு அனுப்பிய புகார் எப்படி இவருக்கு வந்தது? நாங்கள் இவருக்கு எதிராக புகார் அனுப்பியதால் போலீசில் எங்களை பற்றி புகார் கொடுத்துள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாகவும், மேயர் வேட்பாளரை மாற்ற வலியுறுத்தியும் 50 பஸ்களில் சென்னை சென்று முதல்வரை சந்தித்து முறையிடவுள்ளோம்” என்றனர். விபசார வழக்கில் கைதானதாக கூறி ஈரோடு அதிமுக மேயர் வேட்பாளர் மல்லிகா பரமசிவம் குறித்து போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக, அதிமுக நிர்வாகிகள் 7 பேரிடம் சூரம்பட்டி போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
No comments:
Post a Comment