சென்னை சவுகார்பேட்டை பி.கே.ஆர். கார்டன் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திரகுமார் (வயது 17) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவன் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11 ம் வகுப்பு படித்து வந்தான். இதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிபவர் சுப்ரியா. (பெயர் மாற்றம்) 37 வயதான இவருக்கு திருமணமாகி 8 வயதில் மகன் இருக்கிறான். ஆசிரியை சுப்ரியா, மாணவன் சுரேந்திரகுமாரிடம் நெருங்கி பழகினார்.
பாடம் கற்றுக் கொடுக்கும் ஆர்வத்தில் ஆசிரியை இப்படி நடந்து கொள்வதாக சுரேந்திரா நினைத்தான். ஆனால் நாளடைவில் சுப்ரியா அவனுக்கு காதல் பாடத்தை கற்றுக் கொடுத்தார். இதனால் குரு சிஷ்யன் உறவு மாறி 2 பேரும் காதல் வானில் சிறகடிக்க தொடங்கினர். பள்ளியில் காதலை கற்றுக் கொடுத்தது மட்டுமின்றி, மாலையில் டியூசன் என்ற பெயரிலும் சுப்ரியா, சுரேந்திராவுக்கு அறிவியலை கற்றுக் கொடுத்துள்ளார். செல்போன் மூலமாக ஆபாச எஸ்.எம்.எஸ். மற்றும் படங்களையும் சுப்ரியா அனுப்பினார். ஒருநாள் சுரேந்திரா வீட்டில் இருந்தபோது சுப்ரியா அனுப்பிய ஆபாச படம் அவனது செல்போனில் வந்து விழுந்தது. இதனை சுரேந்திராவின் பெற்றோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கடந்த மாதம் யானைக்கவுனி போலீசில் புகார் செய்தனர். பள்ளியிலும் முறையிட்டனர். இதன்பிறகு ஆசிரியை மற்றும் மாணவனின் நலன் கருதி புகார் வாபஸ் பெறப்பட்டது.
ஆசிரியை சுப்ரியாவை அழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பினர். இந்த நிலையில் கடந்த 4 ந்தேதி மாலையில் வீட்டை விட்டு சென்ற சுரேந்திரா பின்னர் வீடு திரும்பவில்லை. அப்பகுதி முழுவதும் தேடிப்பார்த்தும் அவனை கண்டுபிடிக்க முடியாததால் யானைக்கவுனி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடினர். வியாசர்பாடியில் உள்ள ஆசிரியை சுப்ரியாவின் வீட்டுக்கு உடனடியாக தனிப்படை போலீசார் விரைந்து சென்றனர். ஆனால் அங்கு அவரையும் காணவில்லை. சுப்ரியாவும், சுரேந்திராவும் ஓட்டம் பிடித்தது தெரியவந்தது. 2 பேரும் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அவர்களை பிடிக்க போலீசார் வலை விரித்துள்ளனர்.
சுப்ரியாவின் செல்போனும், மாணவன் சுரேந்திராவின் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களை கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு தொய்வு ஏற்பட்டுள்ளது. யானைக்கவுனி இன்ஸ்பெக்டர் ராஜசேகர் விசாரணையை முடுக்கி விட்டுள்ளார். மாணவனுடன் ஓட்டம் பிடித்த ஆசிரியை சுப்ரியா கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். மாணவனை மீட்க போலீசார் நடவடிக்கை எடுத்துவரும் நேரத்தில் ஆசிரியை சிக்கினால் அவரை கடத்தல் வழக்கில் (மாணவர் மைனர் என்பதால்) கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.காதலுக்கு கண் இல்லை என்பார்கள் ஆனால் இன்று.. கள்ளக்காதலுக்கும் கண் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. குருவாக போற்றி மதிக்கப்படவேண்டிய ஆசிரியை ஒருவரே, தனது பள்ளியில் படிக்கும் 11 வது வகுப்பு மாணவனை மயக்கி காதல் வலையில் வீழ்த்திய சம்பவம் பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment