தணிக்கை செய்யப்பட்ட விஸ்வரூபம் படம் தொடர்பாக தமிழக அரசு சினிமா தணிக்கை துறையின் மீது குற்றம் சாட்டியது. எனவே மாநிலங்கள் தணிக்கை துறையின் விதிகளை மீறாவண்ணம் இருப்பதை உறுதிபடுத்தும் விதத்தில் சினிமா சட்டத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முகுல் மட்கல் தலைமையிலான 8 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய தணிக்கை துறை அதிகாரி ஷர்மிளா தாகூர், மத்திய அரசின் விருதுபெற்ற பாடலாசிரியர் மற்றும் எம்.பி. ஜாவத் அக்தர் ஆகியோர் இடம் பெறுவர். இது குறித்து அவர்கள் அளிக்கும் வலுவான புதிய சினிமா சட்டமானது தேசிய திரைப்பட தணிக்கை துறையால் கடைபிடிக்கப்படும்.
No comments:
Post a Comment