இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்களாக உள்ளனர். மேற்கு வங்கத்தில் மட்டும் 5 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். மேற்கு வங்கத்தில் ஆண்டுக்கு 70,000 புற்றுநோய் பாதிப்புக்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஆண்டுதோறும் 35,000 பேர் புற்றுநோயால் உயிரிழந்து வருகின்றனர். இத்தகவலை நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புற்றுநோய் ஆராய்ச்சி கழக மருத்துவ இயக்குனர் ஆஷிஷ் முகோபாத்யாயா தெரிவித்துள்ளார். பொதுவாக ஆண்கள் நுரையீரல் புற்றுநோயாலும், பெண்கள் கர்ப்பப்பைவாய் புற்றுநோயாலும் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களில் பெரும்பாலும் மார்பக புற்றுநோயாலேயே பாதிக்கப்படுகின்றனர். ஒவ்வொரு 100 பெண்களில் 25 பேர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புகைபிடித்தல் மற்றும் ஆல்கஹால் உட்கொள்ளுதல் ஆகியவற்றை முற்றிலும் நிறுத்துவதாலும், சுற்றுப்புற மாசுபடுதலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுப்பதாலும் புற்றுநோயை கட்டுப்படுத்தலாமாம்.
காரணம்:*தேவையற்ற செல்களின் வளர்ச்சி மற்றும் செல்களின் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றம்.
*புகைப்பழக்கம் மற்றும் முறையற்ற உணவுப்பழக்கம்.
*சூரியனிடம்மிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள்.
*புற்றுநோய் ஏற்படும் வாய்புள்ள பணியில் ஈடுபடுதல்.
* எச்.ஐ.வி.,தொற்று உள்ளோரிடமிருந்து பரவுதல்.
*பெற்றோர்களிடம் இருந்து உருவாதல்.
அறிகுறிகள்:*உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு மற்றும் வீக்கம்.
*உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும்
மாற்றங்கள்:*ஆறாத புண்கள்.
*தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல்.
*மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம்.
*தொடர்ந்த அஜிரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்சனை ஏற்படுதல்.
*உடல் எடையில் மாற்றம்.
*இயல்புக்கு மாறான ரத்தபோக்கு மற்றும் ரத்த கசிவு.

No comments:
Post a Comment