ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி’ என்பது பழமொழி. இந்தியாவில் ஆலமரத்தைப்போல
கருவேல மரமும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. பண்டைய காலத்தில்
கருவேலின் கொப்புகள் பல்குச்சிகளாக பயன்படுத்தப்பட்டன. பட்டையில் உள்ள
டேனின் மற்றும் அமிலங்கள் பற்களை சுத்தப்படுத்தி ஈறுகளுக்கு வலிவு தரும்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்: இத்தாவரத்தில் டேனின்கள் அதிக அளவில் உள்ளன. மியூசிலேஜ் மற்றும் ஃபிளோவனாய்டுகள் காணப்படுகின்றன. பட்டைகளில் பாலிஃபினோலிக் கூட்டுப்பொருட்கள் உள்ளன. கேட்டிசின்,எபிகேட்டில் எபிகெலோ கேட்டிசின் குயிர்சிடின், கெலிக் அமிலம் பிசினில் கெலக்டோஸ்,ரெம்னோஸ் போன்றவை உள்ளன. விதைகளில் அமினோ அமினங்கள் காணப்படுகின்றன.
புண்களை குணப்படுத்தும்: கருவேல மரத்தின் இலைகள், பட்டை, பிசின் மற்றும் கனிகள் மருத்துவ பயன் கொண்டவை. துளிர் இலைகளின் வடிசாறு தசை இருக்கும் தன்மை கொண்டது. வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதிக்கு மருந்தாகிறது. பசையாக்கப்பட்டு புண்களின் மீது பூசப்படுகிறது. புண்களை ஆற்றப் பயன்படும் இந்த கசாயம் மலச்சிக்கலுக்கு இனிமாவாக பயன்படுகிறது.
பல்பொடியாகும் பட்டை: கருவேலம் பட்டையில் டேனின்கள் அதிகம் உள்ளது. இது தசை இருக்கும் தன்மை கொண்டது. இதன் கசாயம் புற்றுநோய் மற்றும் சிஃபிலிஸ் பால்வினை நோய்களில் வாய் கழுவியாகவும், கொப்பளிப்பாகவும் உதவுகிறது. தொண்டைக் கம்மல் மற்றும் பல்வலியும் போக்கும். கோனோரியா, சிறுநீரகத்தின் கல், பெண்குறிநோய் மற்றும் வெள்ளைப்படுதல் ஆகியவற்றில் ஊசி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. பட்டையின் கரியும், பாதம்கொட்டை ஓட்டின் கரியும் உப்புடன் கலந்து பல்பொடியாக உதவுகிறது.
பால் உணர்வு தூண்டும்: பிசின் நீரிழிவு நோய்க்கும் வயிற்றுப்போக்கு நிறுத்தவும் நீருடன் கலந்து தரப்படுகிறது. காய்ந்த பிசின் பொடியாக்கப்பட்டு கொய்னாவுடன் கலந்து வயிற்றுப்போக்குடனான காய்ச்சல் நீக்க உதவும். பிசினின் பொடி முட்டை வெண்கருவுடன் சேர்த்து தீப்புண் மற்றும் கொப்புளங்கள் மீது பூசப்படுகிறது. இரத்தபோக்கினை நிறுத்த வல்லது. நெய்யில் வறுத்து உபயோகித்தால் வலுவேற்றியாகவும் பால் உணர்வு தூண்டுவியாகவும் பயன்படும். பிசினின் மருத்துவ குணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இது கணையத்தில் இருந்து இன்சுலின் சுரத்தலை ஊக்குவித்து ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. கனிகளின் கசாயம் சிறுநீர் இனப்பெருக்க உறுப்பு நோய்கள் தீர்க்க பயன்படுகிறது.

No comments:
Post a Comment