இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா முதலில் கொண்டு வந்திருக்க வேண்டும் திருச்சி சிவா.
இலங்கை இறுதிப்போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். தார்மீகப் பொறுப்பேற்று இந்த தீர்மானத்தை இந்தியா முதலில் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் மற்ற நாடுகள் இந்த தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன. எனவே எந்தவிதமான தடுமாற்றமும் இலலாமல் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். அதுதொடர்பாக எங்களக்கு உறுதியளிக்க வேண்டும் என்றார்.
ஜெனிவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் தீர்மானத்தை இந்தியா ஆதரித்து வாக்களிக்குமா என்பது குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் முழக்கமிட்டனர். மாநிலங்களவையில் பேசிய திமுக உறுப்பினர் திருச்சி சிவா, இலங்கை இறுதிப்போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரான்ஸ்,. நார்வே நாடுகள் கண்டன தீர்மானம் கொண்டு வந்துள்ளன.
இலங்கை இறுதிப்போரின்போது ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். தார்மீகப் பொறுப்பேற்று இந்த தீர்மானத்தை இந்தியா முதலில் கொண்டு வந்திருக்க வேண்டும். ஆனால் மற்ற நாடுகள் இந்த தீர்மானத்தை கொண்டுவந்துள்ளன. எனவே எந்தவிதமான தடுமாற்றமும் இலலாமல் இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும். அதுதொடர்பாக எங்களக்கு உறுதியளிக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment