அறுவைச் சிகிச்சை செய்யும் பல் மருத்துவக் கல்லூரி மாணவர்களைப் பார்த்து, அவர்கள் அரைகுறையாக ஏதாவது செய்து விடுவார்களோ என்று ஹனாக்கோ திடுக்கிடுகிறாள்; பயப்படுகிறாள்;
சிகிச்சை நடக்கும்போது அவளுக்கு அதிகமாக வலித்தால் அதைச் சொல்ல பயந்துகொண்டு
முக பாவனையிலேயே தெரிவிக்கிறாள். அவளுடைய கண்கள் திறந்து திறந்து மூடுகின்றன. வாயை
அவ்வப்போது திறந்து மூடுகிறாள். அவள் இப்படி இருப்பதாலோ என்னவோ மாணவர்கள் அவளைப் பற்றி எந்தக் கவலையும் படாமல்
சிகிச்சை செய்கிறார்கள். அவளை வைத்து மிகவும் சுதந்திரமாகப் பல் மருத்துவத்தைக்
கற்றுக் கொள்
கிறார்கள்.
ஆனால் ஷோவா ஹனாக்கோ - 2 மனிதப் பெண் அல்ல. பல் மருத்துவ மாணவர்கள் கற்றுக் கொள்வதற்காக மனிதப் பெண்ணைப் போல உருவாக்கப்பட்டுள்ள ரோபாட். டோக்கியோவில் உள்ள ஷோவா பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட இந்த ரோபாட், பல் மருத்துவத்தின்போது மனிதர்கள் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்களோ, அப்படியெல்லாம் நடந்து கொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஹனாக்கோ 2-ன் உடல் சிலிக்கானால் ஆனது. காற்று அழுத்தத்தினால் அது இயங்குகிறது.
"ஆயிரம் பேரைக் கொன்று அரை வைத்தியனாகு' என்பார்கள் அந்தக் காலத்தில். இந்தக் காலத்தில் ஆயிரம் பேரையல்ல, ஒருவரைக் கூடக் கொல்ல முடியாது என்பதால், ரோபாட்களை உருவாக்கிக் கற்றுக் கொள்கிறார்கள் மருத்துவ மாணவர்கள்.

No comments:
Post a Comment