காலைநேரத்தில் தம்பதிகள் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்கின்றனர் ஆய்வாளர்கள். அதோடு அன்றைய தினம் முழுவதையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது ஆய்வு முடிவு. தம்பதியர்கள் உறவில் ஈடுபடுவதற்கு ஏற்ற நேரம் என்பது குறித்து இத்தாலி நாட்டில் உள்ள தம்பதியரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு முடிவில் காலை ஏழரை மணிக்கு உறவில் ஈடுபடுவது ஆரோக்கியமானது என்று கண்டறியப்பட்டது. காலை நேரத்தில் உறவு கொண்டால் அன்றைய தினம் உற்சாகமாக இருக்குமாம். காலை நேரத்தில் என்னதான் பரபரப்பு இருந்தாலும், பாலுணர்வை தூண்டும் ஹார்மோன் சுறுசுறுப்பாக இருக்குமாம். எனவே காலை நேரத்தில் உறவில் ஈடுபடுவது ஆரோக்கியத்தோடு ஆர்கசத்தையும் அதிகரிக்கும் என்கின்றார் ஆய்வில் ஈடுபட்ட செக்ஸாலஜிஸ்ட் சுஸி ஹெமான். அது சரி ஆபீஸ் போற அவசரத்தில அதுக்கு எங்க நேரம் என்கிறீர்களா? ஆய்வு இத்தாலியில தான் நடந்திருக்கு நம் ஊரில் இல்லை.
No comments:
Post a Comment