ஃப்ளோரிடா மாகணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகம் ஒன்று நடத்திய ஆய்வில் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது. 65 வயதிற்கு மேற்பட்ட 238 தம்பதியரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களிடம் தாம்பத்ய உறவு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மாதம் ஒருமுறை மகிழ்ச்சி அப்போது மாதம் ஒருமுறை உறவில் ஈடுபடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், உற்சாகத்தில் ஆழ்த்தியதாகவும் 40 சதவிகித்ததிற்கு மேற்பட்ட தம்பதியர் கூறியுள்ளனர். தனித்தனியாக கேட்கப்பட்ட கேள்விகளில் மாதத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை உறவில் ஈடுபடுவது மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியதாகவும் 80 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு பாஸ்டனில் நடைபெற்ற ஜிஎஸ்ஏ வின் 64வது வருடாந்திர கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஆரோக்கியம், உற்சாகம் அதேபோல் ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவர்கள் 70 வயது வரை தாம்பத்ய உறவில் ஈடுபடுவதற்கான உணர்வு இருக்கும் என்று இங்கிலாந்தின் மருத்துவ இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழகத்தின் மகப்பேறு மருந்தியல் பிரிவின் ஸ்டேசி டெஸ்லர் லிண்டாவ் தலைமையிலான குழுவினர் வயதான ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் உணர்வு குறித்து வெவ்வேறு ஆய்வுகளை நடத்தினர். அதில் முதுமைக் காலத்தில் பெண்களை விட ஆண்களுக்கு பாலுணர்வு அதிகம் இருக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஆரோக்கியமான உடல் நிலை உள்ளவர்கள் 70 வயது வரை தாம்பத்ய உறவில் ஈடுபாடு காட்ட முடியும் என்று ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 55 வயதான ஆண்கள் ஆரோக்கியமாக இருந்தால் மேலும் 15 ஆண்டுகளுக்கு உறவில் ஈடுபட முடியும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment