பறவைகள் போன்ற சிறு சிறு உயிரினங்கள் பறப்பதற்கு கையாளும் உத்தியை பயன்படுத்தி விமானத்தை பறக்க வைப்பதில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி வெற்றி கண்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிபவர் மண்டயம் ஸ்ரீனிவாசன். இந்தியரான ஸ்ரீநிவாசன், தேனீக்கள் போன்ற சிறு சிறு உயிரினங்கள் பறப்பதற்கு கையாளும் அதே உத்தியை பயன்படுத்தி விமானங்களை பறக்க வைக்கும் முயற்சியில் கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தார். இப்பொழுது குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளார். தற்சமயம் விமானங்கள் ஒரு இலக்கில் இருந்து மற்றொரு இலக்கிற்கு ஜிபிஎஸ் உதவியுடன்தான் பயணிக்கின்றன. குறிப்பாக ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஆளில்லா ஆயுதம் தாங்கி விமானங்கள் இந்த சேவையுடன்தான் குறிப்பிட்ட இலக்கிற்கு பயணித்து எதிரிகளை தாக்குகின்றனர். ஆனால் இந்த சேவை 100 சதவிகிதம் துல்லியமாக இருப்பது இல்லை. மேலும் மிகப் பெரிய கட்டிடங்களுக்கு நடுவில் பறந்து செல்ல இயலாது. ஆனால் மண்டயம் ஸ்ரீனிவாசன் இந்த விமானம் கேமரா மற்றும் கணினி உதவியுடன் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மண்டயம் ஸ்ரீனிவாசன் கூறுகையில், தேனீக்கள் போன்ற சிறு பூச்சி இனங்கள் பற்றி இன்னும் நாம் மிக முழுமையாக தெரிந்து கொள்ள வில்லை. இந்த பூசிகள் தங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து பல கிலோமீட்டர் தூரம் பறந்து சென்று வேண்டிய உணவை சேகரித்து பின்பு தங்கள் இருப்பிடத்தை மிக சரியாக வந்தடைய இவைகள் பயன்படுத்துவது இரு கண்கள் மற்றும் கடுகளவு மூளை. இதே முறையை பயன் படுத்தி சிறு விமானம் ஒன்றில் இரு காமெராக்கள் பொருத்தப்பட்டு, மூளை போன்று இயங்கும் சிறு கணிப்பொறிஉடன் இணைக்கப்பட்டுள்ளது. விமானம் பறக்க தொடங்கயுடன் கணினியுடன் இணைக்கப்பட்ட இரு காமெராக்கள் மூலம் தென்படும் காட்சிளை வைத்து விமானம் எங்கும் மோதாமல் பாதுகாப்பாக பறக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டத்தில் விமானம் மிக சிறப்பாக இயங்கி பத்திரமாக தரை இறங்கியது.
சிறப்பான பகிர்வு.. பாராட்டுக்கள்..
ReplyDelete