வங்கியில் வேலை பார்த்த அனைத்து ஊழியர்களை கொண்டு பல மணிநேர முயற்சிக்கு பின் வரையப்பட்ட மூன்று கொள்ளையர்களின் படத்தை போலீசார் நேற்று வெளியிட்டனர். ஒட்டப்பட்டன. சென்னை பெருங்குடி வங்கி கொள்ளை சம்பவத்தை பார்த்த பரோடா வங்கி ஊழியர்களை போலீஸ் கமிஷனர் அலுவலகம் அழைத்து சென்றனர். அவர்கள் கூறிய முக அடையாளங்களை கொண்டு கிராபிக்ஸ் முறையில் படம் வரையப்பட்டது. இந்த படங்களை பார்த்த வங்கி ஊழியர்கள் கொள்ளையர்களின் முகம் இப்படித்தான் இருந்தது என ஊர்ஜிதம் செய்தனர். அந்த படம் நூற்றுக்கணக்கான பிரதியெடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான கோயம்பேடு பஸ் நிலையம், சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் ரயில்வே ஸ்டேஷங்கள் ஆகிய இடங்களிலும் ஒட்டப்பட்டன. விசாரணை தீவிரம் பரோடா வங்கி கிளையில், 3,000 வாடிக்கையாளர்கள் உள்ளனர். அவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள். வங்கி ஊழியர்களுக்கு சமைத்து கொடுப்பவர்களும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள். பல நாட்களாக திட்டமிட்டு நடந்துள்ள, இந்த கொள்ளையில் எந்த துப்பும் கிடைக்காததால், வடமாநில வாடிக்கையாளர்களை தனிப்படை தீவிர விசாரணை நடத்திவருகிறது. வங்கியை சுற்றியுள்ள பகுதி மற்றும் ராஜிவ்காந்தி சாலை, கிழக்கு கடற்கரை சாலையில் கட்டுமான பணிக்காக வந்திருந்த வெளிமாநிலத்தவர்கள் என, சல்லடை போட்டு சலித்து வருகின்றனர்.பொதுமக்கள் உதவிநேற்று மாலை துரைப்பாக்கம் உதவிகமிஷனர் உமாசங்கர், இன்ஸ்பெக்டர் கிறிஸ்டின் ஜெயசிங் ஆகியோர் முன்னிலையில் பெருங்குடியில் அவசர கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், ராஜிவ்காந்தி சாலையில் உள்ள வாடகைக்களுக்கு வீடுகளை விடும் உரிமையாளர்கள், தங்கும் விடுதி உரிமையாளர்கள், வடமாநில வேலையாட்களை பணிக்கு அமர்த்தும் கான்டிராக்டர்கள் மற்றும் வீட்டு புரோக்கர்கள் ஆகியோர் வரவழைக்கப்பட்டனர். அவர்களின் கொள்ளையர்களின் மாதிரி புகைப்படம் வழங்கப்பட்டது. அந்த பகுதியில் வசித்து திடீர் என மாயமானவர்கள் குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்தனர். நம்பகமான தகவல் : ராஜிவ்காந்தி சாலையில் ஒரு தனியார் நிறுவனம் உள்ளது. அங்கு 2100 வெளிமாநிலத்தினர் வேலை செய்கின்றனர். அவர்களில் நான்குபேர் கடந்த 18 ம் தேதி முதல் முன் அறிவிப்பும் இல்லாமல் பணிக்கு வரவில்லை. அவர்களை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அது குறித்தும் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். தனி மொபைல் எண் அறிவிப்பு : வங்கி கொள்ளை வழக்கில், கொள்ளையர்கள் குறித்து பொதுமக்கள் மொபைல் எண் 98842 03821 ல் தகவல்களை தெரிவிக்கலாம் என்று போலீசார் அறிவித்துள்ளனர். போலீசார் வெளியிட்ட அறிக்கை: பெருங்குடி பேங்க் ஆப் பரோடா வங்கி கொள்ளை சம்பவத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் குறித்த தகவல்களை, 98842 03821 என்ற மொபைல் எண்ணில், 24 மணிநேரமும் தொடர்பு கொண்டு தகவல் அளிக்கலாம். பொறுப்புள்ள காவல் அதிகாரி தகவலை பெற்றுக் கொள்வார். தகவல் அளிக்கும் நபர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும். விவரம் ரகசியமாக வைக்கப்படும்.
No comments:
Post a Comment