|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 January, 2012

சென்னை மெகா மண்டலம் ...

சென்னை மாநகரின் அபரிமிதமான வளர்ச்சியை கருத்தில் கொண்டு 'மெகா' சென்னை மண்டலம் உருவாக்க அரசு பரிசீலித்து வருகிறது. நெரிசலில் சிக்கி சென்னை நகரம் விழிபிதுங்குவதால் புறநகர் பகுதிகள் வேகமாக வளர்ந்து வருகிறது. ஸ்ரீபெரும்புதூர், பழைய மகாபலிபுரம் சாலை, கிழக்கு கடற்கரை சாலை, ஜி.எஸ்.டி.ரோட்டில் செங்கல்பட்டு வரை மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் சென்னையின் மக்கள் தொகை 7.7 சதவீதம் உயர்ந்துள்ளது.



ஆனால் காஞ்சீபுரம் மாவட்டத்தின் மக்கள் தொகை 38.69 சதவீதமும் திருவள்ளூர் மாவட்டத்தின் மக்கள் தொகை 35.25 சதவீதமும் உயர்ந்துள்ளது. அதற்கு காரணம் தென் மாவட்டகளில் இருந்து வேலைக்காக சென்னை வருபவர்கள் புறநகர் பகுதிகளில் குடியேறுகிறார்கள். அதே போல் ஆந்திரா, பீகார், மேகாலயா, உத்திரபிரதேசம் மாநிலங்களில் இருந்து கட்டுமான பணிகள் உள்பட பல்வேறு வேலைகளுக்காக தமிழ்நாட்டுக்கு வருபவர்களும் இங்கு தங்கி விடுகிறார்கள்.
 
ஆனால் இந்த பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்புக்கு ஏற்றபடி வீடு, போக்குவரத்து, கழிவுநீர் வசதி, சாலைவசதி போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்கவில்லை. புறநகர் பகுதிகளில் ஓரளவு விலைகுறைவாக வீட்டு மனைகள் கிடைத்ததால் இந்த பகுதிகளில் அதிக அளவில் மக்கள் குடியேறினார்கள். தற்போது வளர்ந்து வரும் மக்கள் தொகை இதே வேகத்தில் சென்றால் 2026-ல் சென்னை பெருநகரத்தின் மக்கள் தொகை 1.26 கோடியாக இருக்கும் என்று கணக்கிட்டுள்ளனர். எனவே சென்னை மண்டல மேம்பாட்டு ஆணையம் என்ற அமைப்பை உருவாக்க திட்டமிட்டுள்ளனர். இந்த ஆணையம் உருவானதும் ஸ்ரீபெரும்புதூர் மேற்கு பகுதி, காஞ்சீபுரம் மாவட்டத்தின் தெற்கு பகுதி, திருவள்ளூர் மாவட்டத்தின் வடக்கு பகுதி ஆகியவற்றை இணைத்து சென்னை மெகா மண்டலம் உருவாக்கப்படும்.
 
 தற்போது இந்த மாதிரியான அமைப்பு டெல்லி, மும்பை, பெங்களூரில் உள்ளது. மெகா மண்டலம் உருவாகும் போது சென்னை 8 ஆயிரம் சதுர கிலோ மீட்டராக விரிவு படுத்தப் படும். டெல்லியின் பரப்பளவு 33,578 சதுர கிலோ மீட்டராகவும், மும்பை 4354 சதுர கிலோ மீட்டராகவும், பெங்களூர் 8005 சதுர கிலோ மீட்டராகவும் உள்ளது.சென்னை மண்டல மேம்பாட்டு ஆணையம் உருவானதும், அந்த அந்த பகுதியின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய திட்டங்களை செயல்படுத்தும். அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும். முற்றிலும் நகர மயமாக்காமல் விவசாய நில பகுதிகளில் விவசாயமும் மேம்படுத்தப்படும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...