|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 January, 2012

குடியரசு... அப்படின்னா?


உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இன்றைய தலைமுறையினர், சுதந்திர தினம் எப்போது என சொல்லி விடுவர். ஆனால் குடியரசு தினம் எப்போது, ஏன் கொண்டாட வேண்டும் எனக் கேட்டால், அனைவருக்கும் பதில் தெரியுமா என்பது சந்தேகமே.

குடியரசு என்பதன் நேரடிப் பொருள், "மக்களாட்சி'. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் நடவடிக்கையில் மக்கள் பங்கேற்கின்றனர். குடியரசு நாட்டின் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில், நேரடியாகவே மக்களால் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சில நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இம்முறைதான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.

எப்படி வந்தது குடியரசு: நாடு சுதந்திரம் பெறும் முன், பல சுதந்திர போராட்ட தலைவர்களும் ஆங்கிலேயரிடம் இருந்து "டொமினியன்' அந்தஸ்து பெற்றால் போதும் என எண்ணினர். டொமினியன் அந்தஸ்து என்பது, பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகிப்பர். இதற்கு நேரு, நேதாஜி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், முழுமையான சுயராஜ்யம் தான் லட்சியம் என சுதந்திர போராட்ட தலைவர்களிடம் மாற்றம் வந்தது. 1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள், தங்கள் விருப்பத்துக்கு செயல்படக் கூடாது என்பதற்காக அரசியலமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசியலமைப்பு, 1949 நவ., 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.

அடிப்படை கடமைகள்: இந்திய அரசியலமைப்பு சட்டம், பகுதி 5ல் மக்களின் அடிப்படைக் கடமைகள் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.

* தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடக்க வேண்டும்
* அனைவரும் நாட்டுக்காக சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
* ஜாதி, மதம், இன பாகுபாடின்றி சகோதர மனப்பான்மையோடு ஒன்றாக பழக வேண்டும்.
* பாரம்பரியம், கலாசாரத்தை பின்பற்ற வேண்டும்.
* இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.
* வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், அறிவியல் மற்றும் மனிதாபிமான உணர்வுகளை வளர்க்க வேண்டும்.
* அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
* 6-14 வயது குழந்தைகள் கல்வி பெறுவது அவசியம். 

மேலே இருக்கும் எதாவது நாம் பின் பற்றுகிறோமா ? இல்லை நமது தலைவர்கள் ?  இதில் நாம் 63 குடியரசு தினத்தில் இருக்கிறோம் நம்கண் முன்னே தெருவோரம் எத்தனையோ குழந்தைகள் பிச்சை எடுத்து கொண்டுதான் இருக்கிறார்கள் அரசு சொத்துக்களை சுரண்டாத அரசியல்வாதி யாராவது ஒருவர்? பக்கத்து நாட்டில் அழிந்த சொந்தைங்களை கண்டுகொள்ளாத மத்திய அரசாங்கம், இன்னும் தீர்வை ஏற்படுத்தாத முல்லை பெரியார், தானே புயலால் பாதிக்கப்பட்ட மக்களை கண்டுகொள்ளாத அரசாங்கம், இன்னும் இன்னும்...   மக்களாட்சி அடிமைப்பட்டு கிடக்குது தமிழினம்...   

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...