நாட்டின் முன்னேற்றத்துக்காகவும், விடுதலைக்காகவும் பாடுபட்ட தலைவர்கள் மறைந்த நாளை, தியாகிகள் தினமாக கொண்டாடுகின்றனர். இந்த தினம் ஒவ்வொரு நாட்டுக்கும் வேறுபடுகிறது. அந்த வகையில் தேசத்தந்தை மகாத்மா காந்தி, மறைந்த ஜன.30ம் தேதியை தியாகிகள் தினமாக இந்தியா முழுவதும் கடைபிடிக்கின்றனர்.
இன்று டில்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி சமாதிக்கு, ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு துறை அமைச்சர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மலரஞ்சலி செலுத்துவர். மகாத்மா காந்தியின் தியாகத்தையும், சேவையையும் நினைவுபடுத்தும் வகையில், இந்தியா முழுவதும் காலை 11 மணிக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்படும். சாதி, சமயம், மொழி வேறுபாடுகள் கடந்து காந்தியவாதிகள், மகாத்மாவின் சிறப்பை பற்றி பஜனை பாடி கொண்டாடுவர்.1948ம் ஆண்டு ஜன.30ம் தேதி, மகாத்மா காந்திஜி, கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தியாவின் துக்க நாளாக இது அமைந்தது. உலகம் முழுவதிலும் பெரிய தலைவர்கள் கொல்லப்பட்ட வரலாறு உண்டு. இந்த தியாகிகள் நாளில் நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள் பாதுகாப்பு குறித்தும் கருத்தில் கொள்வது அவசியம். அவர்களின் கருத்துக்களையும், கொள்கைகளையும் நினைவுகூர்ந்து தியாகிகளின் கனவுகள் நனவாகிட அனைவரும் உழைத்திடுவோம்.
No comments:
Post a Comment