தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியதாவது: தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான பல்வேறு அம்சங்கள் நிலுவையில் உள்ளன. இவற்றை அமல்படுத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, மக்கள் பிரதிநிதிகளை திரும்பப் பெறும் உரிமை தொடர்பான விஷயத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து, பரிசீலிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும். வரும் பார்லிமென்ட் கூட்டத்தொடரில், தேர்தல் சீர்திருத்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. குற்றப் பின்னணி உடையவர்களை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு தடை விதிப்பது குறித்து, அரசியல் கட்சிகளிடம் ஆலோசனை நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
ஓட்டளிப்பதை கட்டாயமாக்குவதில் பல சிக்கல்கள் உள்ளன. இது, நடைமுறையில் சாத்தியமற்றது. தவறான செயல்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில், தேர்தல் கமிஷனுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க வேண்டும். தேர்தல் நடப்பதற்கு ஆறு மாதங்களுக்கு முன், ஆட்சியில் இருப்பவர்களால் அரசியல் ரீதியான விளம்பரங்கள் கொடுப்பதையும் தடை செய்ய வேண்டும். ஓட்டுப் பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளும் தடை செய்யப்படுமானால், தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளும் தடை செய்யப்பட வேண்டும். இது தொடர்பாக எங்களுக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. இவ்வாறு குரேஷி
No comments:
Post a Comment