புதுச்சேரி விவசாயிக்கு, இந்தாண்டிற்கான ஜனாதிபதியின் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. தோட்டக்கலை துறையில் அதிக மகசூல் தரும் உயர் ரக கனகாம்பரம், சவுக்கு மரக்கன்றுகளை கண்டு பிடித்து, சாதனை படைத்த புதுச்சேரி கூடப்பாக்கம் விவசாயி வெங்கடபதிக்கு, பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து அவர் கூறுகையில், ""கனகாம்பரம், சவுக்கு, கொய்யா உள்ளிட்டவை அதிக மகசூல் தரக்கூடிய வகையில், புதிய ரகங்களை கண்டுபிடித்து, மத்திய அரசின் காப்புரிமை பெற்றுள்ளேன். எனது கண்டுபிடிப்பிற்கு, இதுவரை வேளாண் துறை மற்றும் பல்வேறு நிலைகளில், ஏழு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், நேரடியாக என்னை அழைத்து பாராட்டி கவுரவப்படுத்தினார். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, வேளாண் ஆராய்ச்சியை ஊக்கப்படுத்தியதால், புதிய ரக சவுக்கு "ரங்கசாமி சவுக்கு' என பெயர் வைத்தேன். பத்மஸ்ரீ விருது பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
No comments:
Post a Comment