|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 January, 2012

புதிய அணை கட்ட கேரள அரசு சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்கவில்லை!


தேசிய பல்லுயிரினம் ஆணையம் சார்பாக 2 நாள் மாநாடு சென்னை தியாகராய நகர் ரெசிடன்சி டவர் ஓட்டலில் இன்று காலை தொடங்கியது. மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி ஜெயந்தி நடராஜன் தலைமை தாங்கி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளகளின் கேள்விகளுக்கு மத்திய மந்திரி ஜெயந்தி நடராஜன் பதில் அளித்தார்.
 
கேள்வி:  சாலையோரம் உள்ள மரங்களை அழிக்கிறார்களே?
 
பதில்:  மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலையாக இருந்தாலும் சுற்றுச்சூழல் துறையின் அனுமதி இல்லாமல் சாலையை விரிவுபடுத்த முடியாது. 4 வழிப்பாதையை 6 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்வதற்கும் எங்களிடம் அனுமதி பெற வேண்டும். இதில் நாங்கள் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம். தேவை இல்லாமல் அனுமதி தர மாட்டோம். சாலை யோரத்தில் உள்ள மரத்தின் அளவு என்ன? அடர்த்தி, உயரம் என்ன? என்பதைப் பார்த்து கவனமாகச் செயல்படுகிறோம்.  
 
கேள்வி:  முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டுவதற்கு சுற்றுச்சூழல் துறையிடம் கேரள அரசு சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளதா?



பதில்:  இதுபற்றி பாராளுமன்றத்தில் கேட்கப்பட்டது. இதுவரை கேரளா அரசு அனுமதி கேட்கவில்லை என்றுதான் பாராளுமன்றத்தில் நான் கூறி இருக்கிறேன்.
 
கேள்வி:  பிளாஸ்டிக் கழிவினால் சுற்றுச்சூழல் அதிகமாகப் பாதிக்கப்படுகிறதே?  
 
பதில்:  பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மக்கள் இயக்கமாக கொண்டு வரவேண்டும். பிளாஸ்டிக் கழிவுகளை சாலை போடுவதற்கு பயன்படுத்தினால் தரமாக இருக்கும். இதுபற்றி தொடர்ந்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...