நமக்கே மின் பற்றாக்குறை உள்ளது. மின்சாரம் இன்றி நாமே தவிக்கும் போது இலங்கைக்கு மின்சாரம் தருவது எந்தவிதத்தில் நியாயம் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கார்கில் போரில் இறந்தவர்களுக்கு மத்திய அரசு பல உதவிகளை செய்தது. ஆனால் நமது நாட்டு தமிழ் மக்கள் இலங்கையில் இறந்தபோது மத்திய அரசு எதையும் கண்டுகொள்ளவில்லை. குஜராத்தில் பூகம்பம், ஆந்திராவில் வெள்ளம் என்றவுடன் ஓடிச் சென்று உதவும் மத்திய அரசு கடலூர் தானே புயலால் சின்னாபின்னமாகி கிடந்ததை கண்டுகொள்ளவில்லை. இந்தியா ஒரு பேரரசு. ஆனால் சிறிய நாடான இலங்கைக்கு பயந்து நடுங்குவது ஏன்? மேலும் நமது நாட்டிலேயே மின் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்படுகிறார்கள். அப்படி இருக்க இலங்கைக்கு மின்சாரம் தருவது எந்தவிதத்தில் நியாயம்? மத்திய மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு சென்றார். போய்வந்ததும் இங்கே தமிழக மீனவர்கள் மீது இலங்கைக்காரர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துகிறார்கள் என்றார்.
No comments:
Post a Comment